Published:Updated:

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் பாதுகாப்பானது: உம்மன் சாண்டி

விகடன் விமர்சனக்குழு
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் பாதுகாப்பானது: உம்மன் சாண்டி
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் பாதுகாப்பானது: உம்மன் சாண்டி
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் பாதுகாப்பானது: உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் பாதுகாப்பானது என கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் எனவும், தற்போதுள்ள அணை வலுவாக இருப்பதாகவும், புதிய அணை கட்ட வேண்டியதில்லை எனவும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முல்லைப் பெரியாறு அணை வழக்கை தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையே உள்ள பிரச்னையாக நாங்கள் கருதவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்ற தீர்மானத்தில் இருந்து கேரள அரசு பின்வாங்கவும் இல்லை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பொறுத்தவரை தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் அதே நேரம், கேரள மக்களின் எதிர்கால பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றுதான் பார்க்கிறோம். ஏனென்றொல் முல்லை பெரியாறு அணை 119 ஆண்டுகள் பழமையானது. மேலும் இதை 999 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளனர். அந்த அணை இவ்வளவு காலம் உறுதியாக இருக்கும் என யாரும் சொல்ல மாட்டார்கள்.

எனவே, இந்த நேரத்தில் முக்கிய தேவையாக இருப்பது, இந்த அணைக்கு பதிலாக புதிய வலிமையான அணை ஒன்றை கட்டுவதுதான். அதுதான் பாதுகாப்பானதாக இருக்கும். இவற்றையே எங்களது வாக்குறுதிகளாக தமிழகத்தில் வைக்கிறோம்.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கேரள மக்களின் கவலைகளை பரிசீலிக்கத் தவறிவிட்டது. எங்களது முக்கிய கவலையெல்லாம் அணையின் பாதுகாப்பு மற்றும் கேரள மக்களின் உயிர்கள் பற்றியதுதான்'' என்றார்.