Published:Updated:

பாளை சிறையில் திமுகவினருடன் அழகிரி சந்திப்பு

ஜூலை 20,2011

நில அபகரிப்பு வழக்கில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவினரை, மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று சந்தித்தார். ##~~##

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நில அபகரிப்பில் ஈடுபட்டாதாக, மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் தளபதி, 'பொட்டு' சுரேஷ், திருமங்கலம் தி.மு.க. ஊராட்சி ஒன்றியத் தலைவர் கொடி சந்திரசேகர், கிருஷ்ணபாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நால்வரையும் திமுகவின் தென் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று காலை 10.30 மணிக்கு சிறைச்சாலையில் சந்தித்துப் பேசினார்.

மு.க.அழகிரியுடன் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் சென்றனர்.

மத்திய அமைச்சராக இருந்துகொண்டு, சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில், சிறைச்சாலை வளாகத்துக்குச் சென்று கைதிகளை சந்தித்திருப்பது சர்ச்சைக்குரியது என அதிமுக தரப்பு தெரிவிக்கிறது.