Published:Updated:

மோடி பதவியேற்பு விழா: இந்திய மீனவர்களை விடுவிக்க நவாஸ் ஷெரீப், ராஜபக்சே உத்தரவு!

மோடி பதவியேற்பு விழா: இந்திய  மீனவர்களை விடுவிக்க நவாஸ் ஷெரீப், ராஜபக்சே  உத்தரவு!
மோடி பதவியேற்பு விழா: இந்திய மீனவர்களை விடுவிக்க நவாஸ் ஷெரீப், ராஜபக்சே உத்தரவு!
மோடி பதவியேற்பு விழா: இந்திய  மீனவர்களை விடுவிக்க நவாஸ் ஷெரீப், ராஜபக்சே  உத்தரவு!

புதுடெல்லி/கொழும்பு: மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இன்று டெல்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.இதனையடுத்து பாராளுமன்ற பா.ஜனதா கட்சியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழா நாளை  டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவும் அழைக்கப்பட்டு இருக்கிறார். மத்திய அரசின் அழைப்பை ஏற்றுக் கொண்ட அவர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி வருகிறார்.

அவருடன் ராஜபக்சேவின் மகன் நிமல் ராஜபக்சேவும்,இலங்கை வெளியுறவு  அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்சும் வருகின்றனர்.

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தன்னுடன் வருமாறு இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை, ராஜபக்சே அழைத்து இருந்தார். ஆனால், இந்த அழைப்பை விக்னேஸ்வரன் நிராகரித்து விட்டார்.

தமிழக மீனவர்கள் விடுவிக்க உத்தரவு 

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவுக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நல்லெண்ண நடவடிக்கையாக 151 குஜராத் மீனவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டதைப் போன்று தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானும் உத்தரவு

இதனிடையே பாகிஸ்தான் நாட்டில் உள்ள மாலியர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த  59 இந்திய மீனவர்கள்  பேர் நல்லெண்ண அடிப்படையில் இன்று  பாகிஸ்தான அரசு விடுதலை செய்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த 229 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் வாடுகிறார்கள். 780 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பிடித்து வைத்துள்ளது. அதே போல பாகிஸ்தானை சேர்ந்த 200 மீனவர்களும் 150 படகுகளும் இந்திய கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.