Published:Updated:

ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம்!

ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம்!

ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம்!

ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம்!

Published:Updated:
ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம்!
##~##

'ஸ்டாலின் தலைவர் ஆவதில் என்ன தவறு? வாய்ப்பு வருமேயானால் அதை பயன்படுத்தி நானும் ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன்’ - தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, இப்படிப் பகிரங்கமாகவே அறிவித்து இருக்கிறார் கருணாநிதி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருணாநிதி நினைத்ததைச்செயல்படுத்த முடியுமா?

''தி.மு.க.வின் முக்கிய அமைப்பு என்றால் உயர்​மட்ட செயல்திட்டக் குழுவும், அதற்கு அடுத்த​படியாக பொதுக் குழுவும்தான். இந்த இரண்டையும்விட வலு வான​வர்கள் மாவட்டச் செயலாளர்கள். அத்தகைய மாவட்டச் செயலாளர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை வைத்தே அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்துவிடலாம்'' என்கிறார்கள் சீனியர் தலைகள்.

அழகிரியின் கோட்டையில் ஓட்டை!

மாவட்டச் செயலாளர்களின் ஆதரவுக் கரம் யாரை நோக்கி நீள்கிறது?

தி.மு.க-வில் கட்சி அடிப்படையில் 35 மாவட்டங்கள் இருக்கின்றன. தென் மண்டலம் முழுவதும் அழகிரியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. தென் மண்டலம் தவிர மற்ற மாவட்டச் செயலாளர்கள் பலரும் ஸ்டாலினை வெளிப்படையாகவே தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். தென் மண்டலத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஸ்டாலின் தலைவர் ஆவதை விரும்பவில்லை. இப்போது அதையும் சரிசெய்து விட்டது ஸ்டாலின் தரப்பு.

ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம்!

ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு வரை அழகிரியின் கட்டுப்பாட்டில் 10 மாவட்டச் செயலாளர்கள் இருந்தனர். அதை இப்போது இரண்டாகச் சுருக்கி​விட்டனர். ஒருவர், மதுரை புறநகர் செயலாளர் மூர்த்தி. மற்றொருவர், தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா. அழகிரியின் ஆதரவு ஆட்களில் பலர் ஸ்டாலின் பக்கம் தடம் புரண்டனர். அதில் முக்கியமானவர் மதுரை மாநகரச் செயலாளர் தளபதி. இளைஞர் அணிக்கு நேர்காணல் நடத்துவதற்காக ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் மதுரை வந்தார். அப்போது, அதற்கான ஏற்பாடுகள் அத்தனையும் செய்தது தளபதி.

திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஐ.பெரியசாமி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் ஆகியோர் அழகிரியின் அதிதீவிர விசுவாசிகள். அவர்கள் இப்போது ஸ்டாலின் ஆதரவாளர்களாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ராமநாதபுரம் சுப.தங்கவேலனுக்குப் போட்டியாக ரித்தீஷைக் கொம்பு சீவிவிட்டார் அழகிரி. தங்க​வேலனுக்கு ஸ்டாலின் ஆதரவு பலமாக இருந்ததால் ரித்தீஷ் படம் அங்கே ஓடவில்லை.

அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகம், சேலத்தில் மட்டும் இல்லாமல் தலைமை வரை ஸ்டாலினுக்குக் குடைச்சல் கொடுத்து வந்தார். ஆறுமுகத்தின் மறைவுக்குப் பிறகு, நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர் சிவலிங்கமோ ஸ்டாலின் பேச்சுக்கு மறுபேச்சு சொல்லாதவர். இப்படியாக ஒரு

ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம்!

பக்கம் அழகிரியின் பலம் குறைந்துகொண்டே போக... ஸ்டாலினுக்கு அது ஏறுமுகமானது.

எங்கள் தலைவர் ஸ்டாலின்!

ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாரா என்று கேட்டால், கண்களை மூடிக்கொண்டு கையைத் தூக்க 25 மாவட்டச் செயலாளர்கள் தயார். கன்னியாகுமரி சுரேஷ் ராஜன், தென்சென்னை ஜெ.அன்பழகன், காஞ்சிபுரம் தா.மோ.அன்பரசன், திருச்சி கே.என்.நேரு, நெல்லை கருப்பசாமி பாண்டியன், சிவகங்கை பெரியகருப்பன், கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விழுப்புரம் பொன்முடி, விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நாமக்கல் காந்திச் செல்வன், பெரம்பலூர் துரைசாமி, ஈரோடு என்.கே.கே.பி.ராஜா, திருப்பூர் வெள்ளக்கோவில் சாமி நாதன், கிருஷ்ணகிரி செங்குட்டுவன், ராமநாதபுரம் சுப.தங்கவேலன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கரூர் நன்னியூர் ராஜேந்திரன், திருவண்ணாமலை வேலு, திருவாரூர் கலைவாணன், நாகை விஜயன், தஞ்சை பழனிமாணிக்கம், புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு என்று ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் பட்டியலைப் பகிரங்கமாகவே அடுக்குகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஸ்டாலின் கையில் கட்சி!

தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் முல்லைவேந்தன். இவர் கருணாநிதியின் விசுவாசி. அங்கே ஸ்டாலி னுக்கும் முல்லைக்கும் இடையில் அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டன. அதனால், முல்லைக்குப் போட்டியாக அந்த மாவட்டத்தையே வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து, ஒரு மாவட்டத்துக்கு இன்ப சேகரனைப் பொறுப்​பாள​ராக நியமித்தனர். இன்பசேகர​னுக்கு ஸ்டாலின்தான் தெய்வம். அந்த அளவுக்குத் தீவிர விசுவாசி.

விரைவில், மத்திய சென்னை என்ற புதிய மாவட்​டத்தை உருவாக்கி, தென் சென்னை மாவட்டச் செயலா​ளரான ஜெ.அன்பழனை அங்கே செயலாளர் ஆக்கப்​போகி றார்களாம். தென் சென்னை மாவட்​டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் பெயர் பரிசீலனையில் இருக்கிறதாம். வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ராஜாவுக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுக்க வேண்டும் என, ஆறுமுகத்தின் குடும்பத்தில் இருந்து பலரும் கருணாநிதியிடம் முறை இட் டனர். ஆனால் கருணாநிதி​யோ, அதற்குப் பிடிகொடுக்கவே இல்லை. மகளின் திருமணத்துக்கு தேதி கேட்டு கருணாநிதியைச் சந்தித்த வீரபாண்டி ராஜாவிடமும், 'அவ்வளவு தூரம் வருவதற்கு எனக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. தளபதியைப் போய்ப் பார்.. அவர் சொல்ற மாதிரி கேட்டு நடந்துக்கோ’ என்று அனுப்பி விட்டாராம். இனி, யார் மாவட்டச் செயலாளர்களாக வர வேண்டும்.. யார் மாவட்டப் பொறுப்பாளராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது ஸ்டா லின்தானாம்.

கனிமொழியின் சாய்ஸ் ஸ்டாலின்!

கோவை மாவட்டச் செயலாளர் பொங்கலூர் பழனிசாமி, தர்மபுரி முல்லைவேந்தன், வேலூர் காந்தி, தூத்துக்குடி பெரியசாமி ஆகியோர் மதில் மேல் பூனையாக நிற்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை, இந்த அணிக்கு அவர் தலைமை ஏற்று இருந்தார். இவர்களின் கருத்துக்களை அழகிரியிடம் கொண்டுசெல்லும் தூதுவராகவும் ஆறுமுகம் செயல் பட்டார். ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு, இவர்கள் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். இவர்களைத் தங்களின் பக்கம் வளைக்கும் பொறுப்பை தனக்கு நெருக்கமான ஒருவரிடம் கொடுத்திருக்கிறாராம் ஸ்டாலின். கனிமொழியின் ஆதரவைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ளவே, கனி மொழியின் பிறந்த நாளில் அவரை நேரில் பார்த்து வாழ்த்தி இருக்கிறார் என் கிறார்கள். ஸ்டாலினா... அழகிரியா என்ற நிலை ஏற்படும்போது கனிமொழி யின் சாய்ஸ் ஸ்டாலின்தான். அதைத் தன்னுடைய பிறந்த நாள் அன்று வெளிப்​படுத்தி விட் டார் கனிமொழி.

'ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று தலைவர் கலைஞர் கூறி இருக்கிறார். ஸ்டாலினின் சகோதரி என்ற அடிப்படையில் எனக்கு அது மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்று நிருபர்களுக்கு கனிமொழி அளித்த பேட்டி, அவரது மனதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம்!

தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் திருவிழா ஆரம்ப​மாகிறது. முதல் கட்டமாக கிளைக் கழகத் தேர்தல். கிளைக் கழகத்தில் இருந்தே ஸ்டாலின் ஆதரவு வட்டத்தைப் பெரிதாக்கும் காய் நகர்த்தல்கள் ஆரம்பமாகி விட் டதாம். இன்னும் ஆறு மாதங்களுக்குள் மாவட்டச் செய லாளர் தேர்தல் வரும்போது, அத்தனை மாவட்டச் செயலாளர்களும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் திட்டமாம். மாவட்டச் செயலாளர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, பொதுக் குழு நடக்கும். அப்போது, தி.மு.க-வின் நாயகனாக ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடக்கும்!

- எம்.பரக்கத் அலி

படங்கள்: வீ.நாகமணி