Published:Updated:

''சிதம்பரம் அங்கே ஆளணும்னா, நாங்க இங்கே வாழணும்!''

நடிகர் டயலாக்!

''சிதம்பரம் அங்கே ஆளணும்னா, நாங்க இங்கே வாழணும்!''

நடிகர் டயலாக்!

Published:Updated:
##~##

சினிமாக்காரர்கள் சினங்கொண்டு விட்டனர்! 

இந்தியத் திரைத் துறையினர் மீது மத்திய அரசு விதித்து இருக்கும் சேவை வரியை எதிர்த்து கடந்த 7-ம் தேதி தமிழ் சினிமாத் துறையும் ஒட்டுமொத்த அமைப்​புகளும் வள்ளுவர் கோட்டத்துக்கு வெளியே உண்ணாவிரதத்தில் அமர்ந்தது. உண்ணா​விரதம் ஆரம்பித்த காலை 8 மணியில் இருந்தே பெரியதிரை ப்ளஸ் சின்னத் திரை நடிகர்கள் மேடையில் ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக, அரசியல் ரீதியான போராட்டங்கள் நடக்கும்போது அந்தந்த கட்சிக்காரர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பொதுமக்கள் கூட்டம் அவ்வளவாக இருக்காது. ஆனால், இந்த உண்ணாவிரதத்தில் மேடையில் அமர்ந்து இருந்த சினிமா நடிகர்கள், நடிகைகளைக் காண்பதற்கு பொதுமக்கள் கூட்டம் திரளாக கூடியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, உண்ணாவிரதத்தில் அமர்ந்தவர்களை வரிசையாக பார்த்துச் செல்லும் ஏற்பாடுகளை காவல் துறை சிறப்பாகச் செய்தது!

''சிதம்பரம் அங்கே ஆளணும்னா, நாங்க இங்கே வாழணும்!''

கைவசம் படங்களே இல்லாத நிலையில் இருந்தாலும் மும்தாஜ் வந்திருந்தார். முண்டா பனியனுடன்

''சிதம்பரம் அங்கே ஆளணும்னா, நாங்க இங்கே வாழணும்!''

நமீதா வந்திருந்தார். சமீபத்தில் திருமணம் செய்து​கொண்ட பிரசன்னா - சினேகா தம்பதியும் ஆஜர். ஆனால், முன்னணி நடிகைகளான தமன்னா, அனுஷ்கா, த்ரிஷா, அமலா பால் உள்ளிட்டோர் மிஸ்ஸிங். இயல்பாக வெள்ளித் திரை, சின்னத் திரை நடிகர்கள் இடையில் ஈகோ தலைவிரித்தாடும். இந்த உண்ணா​விரத மேடையில் இரண்டு திரை நடிகர்களும் பாரபட்சம் இன்றி சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தது சிறப்பு.

ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால், ஜீவா, சத்யராஜ், பிரபு ஆகியோர் கலந்து​கொண்டனர். கமல், அஜித் மிஸ்ஸிங்! கமல் அமெரிக்கா சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். ''சேவை வரியை எதிர்க்க சினிமா அமைப்புகள் ஒன்றுகூடிய மாதிரி தன்னுடைய 'விஸ்வரூபம்’ படத்துக்கு பிரச்னை ஏற்பட்டபோது சினிமா அமைப்புகள் ஒன்றுகூடி ஆதரவு தெரிவிக்க​வில்லை. மாறாக, வேடிக்கை பார்த்தது என்ப​தில் கமலுக்கு மனவருத்தம்'' என்று சிலர் சொன் னார்கள்.

விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசியதில் இருந்து...

சத்யராஜ்: ''இந்த வருஷம் படத்துல பிஸியா நடிச்சாலும் சேவை வரி கட்டணும். அடுத்த வருஷம் படமே இல்லாம வீட்டில் கிடந்தாலும் வரி கட்டணுமாம். இந்த சினிமா தொழிலே வேணாம்னு பிச்சை எடுக்கப் போனால், அப் பவும் சர்வீஸ் டாக்ஸ் கட்டணும். இது என்ன நியாயம்? சரியான காமெடி கவர்மென்ட்டா இருக்குங்கோ!''

கேயார்: ''நாட்டில் இருக்கும் மக்களை கவலை மறந்து சிரிக்க வைத்து பொழுதுபோக்க வைப்பவர்கள் நடிகர், நடிகைகள். ஒரு வாரம் சினிமா தியேட்டரை இழுத்து மூடிப்பாருங்கள்.. நாட்டில் மனிதன் ரிலாக்ஸ் செய்ய முடியாமல், வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவான். இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடி. அதில் ஒரு லட்சம் நபர்கள் மட்டுமே சினிமாக் கலைஞர்கள். அவர்களின்

''சிதம்பரம் அங்கே ஆளணும்னா, நாங்க இங்கே வாழணும்!''

சேவை வரியை நீக்குவதால், அரசாங்கத்துக்கு நஷ்டம் ஒன்றும் ஏற்படப் போவது இல்லை!''

அமீர்: ''இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் நாங்க ப.சிதம்பரத்தைச் சந்திச்சு பேசப்போறோம். அப்போது, கண்டிப்பா ரஜினியும் எங்ககூட வந்து அவர்கிட்ட பேசணும். ஏன்னா, 'வேட்டிக் கட்டிய தமிழர் ஒருவர்தான் பிரதமராக வரணும்’னு சமீபத்துல ரஜினி சொன்னாரு. அப்படி சொன்னவரு, எங் களுக்காக சிதம்பரத்துக்கிட்ட பேசணும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகுது. சிதம்பரம் அங்கே ஆளணும்னா, நாங்க இங்கே வாழணும்.''

ரஜினி:''ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரிகளை அரசாங்கத்துக்குக் கட்டாம ஏமாத்துறவங்களை கண்டு​பிடிச்சு வரிப்பணத்தை வசூலிச்சாலே அரசுக்கு தேவை​யான பணம் கிடைச்சிடும் அதைவிட்டுட்டு, தேவை இல் லாம சேவை வரி விதிச்சு இருக்கிறதை நீக்கணும்!''

ஸ்ரீதர், தியேட்டர் உரிமையாளர் சங்க மாநில இணைச் செயலாளர்: ''டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் இருக்கும் மல்டி ஃப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு வருமான வரி கிடையாது என்று முன்பு அறிவித்து இருந்தார் ப.சிதம்பரம். அப்போது சென்னையில் இருந்த அபிராமி ராமநாதனும் நானும் டெல்லி சென்று ப.சிதம்பரத்தைச் சந்தித்​தோம். 'மும்பை. கொல்கத்தா, டெல்லி மாதிரி சென்னைக்கும் வரிவிலக்கு தாருங்கள்’ என்று கேட்டுக்கொண்டோம். மறுநாளே, மூன்று நகரங்களுக்கும் நீக்கி இருந்த வருமான வரியைக் செலுத்தும்படி உத்தரவு போட்டார். இதுதான் ப.சிதம் பரத்தின் பண்பு!''

உண்ணாவிரத்தில் பேசிய ஒரு நடிகர், ''எங்களுக்கு எல்லாம் சேவை வரி விதிக் கிறீங்களே... ஏன் பாடல் ஆசிரியர்களுக்கும், வசன​கர்த்தாகளுக்கும் சர்வீஸ் டாக்ஸ் விதிக்கவில்லை'' என்று கேள்வி எழுப்பினார். மல்டி ஃப்ளெக்ஸ் ஸ்டைலில் நாளைக்கே அவர்களுக்கும் சேவை வரி விதித்து மத்திய அரசு அறிவித்தாலும் ஆச்சர்யப்பட முடியாது!

- எம்.குணா, உ.அருண்குமார்

படங்கள்: வீ.நாகமணி, ஆ.முத்துக்குமார்