Published:Updated:

கஞ்சா வழக்கு: இலங்கை சிறையில் இருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை!

Vikatan Correspondent
கஞ்சா வழக்கு: இலங்கை சிறையில் இருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை!
கஞ்சா வழக்கு: இலங்கை சிறையில் இருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை!
கஞ்சா வழக்கு: இலங்கை சிறையில் இருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை!

ராமேஸ்வரம்: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஞ்சை மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ஆற்காட்டுத்துறையை சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த மீனவர் ஒருவரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கஞ்சா கடத்தியதாக தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூலம் மல்லகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், கடந்த மாதம் 23 ஆம் தேதி 3 மீனவர்களுக்கும் தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. அபராத தொகை நேற்று மீனவர்களின் உறவினர்கள் மூலம் மல்லாகம் நீதிமன்றத்தில் கட்டப்பட்டது. இதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் இருந்த மீனவர்கள் 3 பேரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

3 மீனவர்களையும் இந்தியா அழைத்து வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

இரா.மோகன்