Published:Updated:

நில அபகரிப்பு: ஜெ.அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம் கைது

Vikatan Correspondent
நில அபகரிப்பு: ஜெ.அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம் கைது
நில அபகரிப்பு: ஜெ.அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம் கைது

சென்னை/கோவை, ஜூலை 30,2011

நில அபகரிப்பு வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியார் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

நில அபகரிப்பு: ஜெ.அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம் கைது

சேப்பாக்கம் / திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான  ஜெ.அன்பழகன் இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகார் தொடர்பாக சென்னையில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்காக, ஜெ.அன்பழகனை போலீஸார் திருப்பூர் அழைத்துச் சென்றனர்.

வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிறை...

இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தன் மீதான 2 நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக காவல்துறையிடம்  சரணடைந்து, பின்னர்  நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார், வீரபாண்டி ஆறுமுகம்.

இந்நிலையில் அவர் இன்று காலை சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு கையெழுத்திட வந்ததார்.

அவரை மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் தொடர்பாக போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் அய்யந்திருமாளிகையில் உள்ள 4-வது ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்தை கோவை மத்திய சிறையில் அடைக்க போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

எஸ்ஸார் கோபி சரண்...

முன்னதாக, நில அபகரிப்பு வழக்கில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.