Published:Updated:

மு.க.ஸ்டாலின் கைதாகி விடுவிப்பு!

Vikatan Correspondent
மு.க.ஸ்டாலின் கைதாகி விடுவிப்பு!
மு.க.ஸ்டாலின் கைதாகி விடுவிப்பு!

ஜூலை 30,2011

மு.க.ஸ்டாலின் கைதாகி விடுவிப்பு!

திருத்துறைப்பூண்டி அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பின்னர் விடுவிக்கப்பட்டார்.
##~~##

திருத்துறைப்பூண்டி அருகே வாகன அணிவகுப்புடன் ஸ்டாலின் சென்று கொண்டிருந்த போது, போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

திருவாரூர் மாவட்ட திமுக செயலர் கலைவாணனை ஒப்படைக்குமாறு அவரிடம் போலீஸார் கேட்டனர்.

அதற்கு, என்ன வழக்கு என்று சொல்லாமல் ஒப்படைக்க முடியாது என்று ஸ்டாலின் வாதிட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக விளக்கம் தர மறுத்த போலீஸாரை கண்டித்து ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், விஜயன் எம்.பி. உள்ளிட்ட திமுகவினர் சுமார் 300 பேர் கைது செய்து, அவர்களை போலீஸார் திருவாரூருக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், பிற்பகல் 2 மணியளவில் ஸ்டாலின் உள்பட 300 பேரை போலீஸார் விடுவித்தனர்.

மாணவனின் மரணம் காரணமா?

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தூண்டுதலின் பேரில் கொறடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வகுப்புக்கு செல்லாமல் திமுகவினர் நேற்று தடுத்துள்ளனர் என்பது குற்றச்சாட்டு.

அந்த மாணவர்களில் சிலர் வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றி அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் விஜய் என்ற மாணவன் பரிதாபமாக மரணமடைந்தார். இது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவன் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்துறைப்பூண்டி அருகே அவரை இன்று கைது செய்ய சென்றுள்ளனர்.

அப்போது, இந்தக் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.