பிரீமியம் ஸ்டோரி

றுகிய முகம்... கலங்கிய கண்கள்... பலவீனத்தின் எல்லையைத்

##~##
தொட்ட மனம்... தளர்ச்சியை எட்டிய கால்கள்... என மொத்த ஸ்ருதியும் இறங்கிய நிலையில் ஆ.ராசா திகார் சிறைக்குள் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டுள்ளார். ''வாங்கஜி வாங்க'' என்று அங்குள்ளோர் இகழ்ச்சியாக அழைத்தாலும் அவரால் என்ன  பதிலளிக்க முடியும்?

 திகார் சிறை ஆசியாவிலேயே பெரியது. சுமார் 12 ஆயிரம் கைதிகள் இப்போது உள்ளனர். திகார் என்ற கிராமத்தில் உள்ள இந்தச் சிறை  வளாகத்தில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. சிறைச்சாலை எண் 1-ல் உள்ள வார்டுகள் மிகவும் பிரமாதமாக பராமரிக்கப்​படுவதைப் பாராட்டி,  மாடல் வார்டுக்கான ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. சிறை எண் 1-ல் செல் எண் 9-ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிமினல்களும், இந்தியாவில் கொடூர தாதாக்களும் அடைந்து கிடக்கும், இந்த திகார் சிறைச்

வாங்க G வாங்க!

​சாலைக்கு பிப்ரவரி 17-ம் தேதியன்று ஆ.ராசா கொண்டு வரப்பட்டார். ஏற்கெனவே இதே ஊழல் வழக்கில் கைதான சித்தார்த் பரூவா, ஆர்.கே.சந்தோலியா இருவரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் இந்தச் சிறைச்சாலையில்தான் இருக்கிறார்கள். இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் உண்டு. உள்வட்டப் பாதுகாப்புகளை டெல்லி யூனியன் பிரதேச சிறைத்துறை போலீஸார் கவனிக்கிறார்கள். இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளிவட்ட பாதுகாப்புப் பணியில் இருக்​கிறார்கள். தமிழக போலீஸின் ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் போலீஸார் டவர் கண்காணிப்பு, ஹை ரிஸ்க் வார்டு பாதுகாப்பு, சர்ப்ரைஸ் செக்கிங் மற்றும் சிறைச்சாலை ரோந்து போன்ற பணிகளை பல வருடங்களாகச் செய்து வருகிறார்கள். ஆ.ராசா அடைக்கப்பட்டிருக்கும் ஹை ரிஸ்க் வார்டு செல்லின் எண் 9-ஐ  நுழைவாயில், செல் கதவு... என்று ஐந்து பூட்டுகளைக் கடந்துதான் அடைய​முடியும். இந்த வார்டினை சிறைச்சாலை அதிகாரிகளும், தமிழக ஆயுதப்படைப் பிரிவு போலீஸாரும் கூட்டாகத்தான் திறக்கவேண்டும் என்பது சட்டம். இந்த

வாங்க G வாங்க!

வார்டுக்கு மற்ற கைதிகள் வரமுடியாது. அதேபோன்று, இங்கே இருப்பவர்களும் சிறைச்சாலைகளின் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியாது. 24 மணி நேரமும் ரகசிய கேமரா கண்காணிப்பு உண்டு.  

டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, ''சிறைச்சாலையில் உள்ள சாதாரண கைதிகளுக்கும் ஹை ரிஸ்க் வார்டில் உள்ள கைதி​களுக்கும் வசதிகளில் பெரும் வித்தியாசம் உண்டு. ஆ.ராசா அடைக்கப்பட்டுள்ள அதே சிறைச்சாலையில் உள்ள செல் ஒன்றில்தான், பெண் பத்திரிக்கையாளர் ஷிவானி கொலைவழக்கில் கைதான அரியானா மாநில ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.சர்மா அடைக்கப்பட்டு இருக்கிறார். இங்குள்ள செல் ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது மூன்று பேர்கள் அடைக்கப்​படுவார்கள். அந்த​வகையில், தனி செல்தான் ராசாவுக்கு ஒதுக்குவார்கள். வார்டு வளாகம், வெளி ஏரியாக்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ரகசிய கேமராக்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஹை ரிஸ்க் வார்டு செல்லில் உள்ள கைதிகளின் மூவ்மென்ட்களை எல்லா நேரமும் கன்ட்ரோல் ரூமில் இருந்தபடி, கண்காணிப்பார்கள். செல்லில் ஃபேன், கேபிள் டி.வி. வசதி உண்டு. சிறைச்சாலையின் பொது இடத்தில் வாரத்துக்கு இருமுறை டி.வி.டி. பிளேயர் வைத்து திரைப்படங்கள் ஒளிபரப்புவார்கள். விரும்பும் பத்திரிகையை வார்டுக்கு வரவழைத்துப் படிக்கலாம். செல்லின் ஒரு மூலையில் இண்டியன் டைப் டாய்லெட் இருக்கும். அதைத்தான் தினப்படி கைதி பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. ஜீன்ஸ் பேன்ட் தவிர வேறு எந்த டிரஸ்ஸையும் அணியலாம்.  கைதியே அவரது உடைகளை துவைத்துக்கொள்ள வேண்டும். அயர்ன் பண்ண சிறைச்சாலையில் வசதி உண்டு.

ஒரு ஸ்பெஷல் கேன்டீன் உண்டு. இங்கே ஸ்நாக்ஸ் முதற்கொண்டு அனைத்து அயிட்டங்களும் கிடைக்கும். மாதம் நாலாயிரம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இந்த தொகையைக் கொடுத்து டோக்கன் வாங்கி செல்லில் வைத்துக்கொள்ளலாம். ஹை ரிஸ்க் வார்​டில் இருப்பவர்கள் இந்த கேன்டீனுக்குப் போக அனுமதி​யில்லை. அதனால், 'சேவாதார்' என்று அழைக்கப்படும் ஹெல்பர்களை பொருள் வாங்கி வர பயன்படுத்திக் கொள்ளலாம். இதே சிறைச்சாலையில் வேலை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களும் உதவுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கும் காசு கிடைக்கும். டால், ரொட்டிதான் முக்கியமான உணவு. வெஜிடபிள் சப்ஜி தருவார்கள். மற்றபடி, நான்வெஜ் கிடையவே கிடையாது!'' என்றார்.

வாங்க G வாங்க!

கைதிகளின் பெயர்களின் முதல் எழுத்து ரொம்ப முக்கியம். வாரத்தின் ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்ட எழுத்துகளைக் கொண்டவர்களுக்கு என பிரித்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், ராசாவின் முதல் எழுத்தான 'ஆர்', 'ஏ’ மற்றும் 'எஸ்’ எழுத்து கொண்டவர்களை திங்கள் அன்று உறவினர்கள் நேரில் பார்க்கலாம். பார்வையாளர்கள் அறையில் ஐம்பது மைக்குகள் இருக்கும். சந்திக்க வருபவருக்கும் கைதிக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஒரே நேரத்தில் இங்கிருந்து ஐம்பது பேர்கள் மைக்கில் எதிர்புறம் உள்ள கைதிகளிடம் பேசுவார்கள். கூச்சல், குழப்ப​மாகத்தான் இருக்கும்.  

திகார் சிறைச்சாலையில் நுழைந்த ராசாவிடம் அங்குள்ள விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அதிகாரிகள் விலாவாரியாகச் சொன்னார்களாம். அவர்​களிடம் சில சந்தேகங்களைக் கேட்ட ராசா, அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு முகம் உறைந்து போனாராம். 'கைது செய்தால் மட்டுமே அவர் குற்றவாளி இல்லை’ என்று ஆ.ராசாவுக்கு சான்று தந்த தங்கள் தலைவர், திகார் சிறைக்குச் சென்று ராசாவை நேரில் பார்த்து திடப்படுத்துவரா என்பது அவருடைய ஆதரவாளர்களின் ஆர்வமான எதிர்பார்ப்பு. மாற்றுக்கட்சியில் இருந்த போதும் பொடாவில் கைதான வைகோவை சிறையில் சென்று பார்த்த தலைவர், சொந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரை பார்க்காமலா இருப்பார் என்பது ஆ.ராசாவின் ஆதரவாளர்களின் நம்பிக்கை!

- ஜூ.வி. நிருபர் டீம்

(அட்டையில் - கோபாலபுரம் முதல்வர் இல்லத்தில் எடுக்கப்பட்ட பழைய படம்.)

அட்டைப் படம்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு