Published:Updated:

அடுத்த போப் ஆண்டவர் யார்?

பந்தயத்தில் புரளும் கோடிகள்

அடுத்த போப் ஆண்டவர் யார்?

பந்தயத்தில் புரளும் கோடிகள்

Published:Updated:
##~##

'போப் ஆண்டவர்’ என்பது வெறும் பதவியை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. உலகம் முழுதும் பரவிக்​கிடக்கும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுரு அவர். அரசியல் ரீதியாகப் பார்த்தால் வாடிகன் நகரம் என்ற நாட்டின் ஆட்சியாளரும் அவரே. கருத்தடை தொடங்கி நுகர்வோர் கலாசாரம் வரை அவர் சொல்லும் கருத்துக்கள், உலகப்பந்தின் அரசியல் தொடங்கி பொருளாதாரம் வரை பலவிதப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

 அப்படிப்பட்ட உச்சப் பதவியில் இருந்து பிப்ரவரி 28-ம் தேதி அன்று விலகப் போவதாகப் போப் ஆண்டவர் பெனடிக்ட் அறிவித்திருப்பது உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சமீபகால சரித்திரத்தில், பதவி​யில் இருக்கும் எந்த போப் ஆண்டவருமே இப்படி பதவி விலகியது இல்லை என்பதால், 'போப் பெனடிக்ட் தானாகவே பதவி விலகுகிறாரா? அல்லது கண்ணுக்குத் தெரியாத ஏதாவது சக்திகள் அவரைப் பதவி விலக நிர்ப்பந்திக்கிறதா?’ என்ற கேள்விகள் இப்போது பலரது மனங்களிலும் அலையடிக்கின்றன. அப்படி என்றால் போப் பென டிக்டின் எதிர்ப்பாளர்கள் யார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த போப் ஆண்டவர் யார்?

''போப் பெனடிக்ட், ஒரு காலத்தில் ஹிட்லரின் நாஜி கட்சியில் இருந்தவர். 'ஜோசப் ரட்ஜிங்கரா’க அவர் தனது ஜெர்மன் நாட்டில் வசித்த இளமைப் பிராயத்தில், அதாவது அவரது 14 வயதிலேயே ஹிட்லர் நடத்திய இளைஞர் படையில் பணியாற்றி இருக்கிறார். எதிரிகளின் விமானங்களைச் சுட்டுத்தள்ளும்  படை, பீரங்கிப் படை இரண்டிலுமே வேலை பார்த்திருக்கிறார். ஒருகட்டத்தில், ஹிட்லரின் ராணுவத்தில் பணியாற்றுவது பிடிக்காமல் தப்பிவந்து விட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் போப் ஆண்டவராக ஆன பிறகும்கூட, இரண்டாம் உலகப் போரின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட யூதர்கள் மனம் புண்படும்படி பேசினார்...'' என்று அவர் மீது ஒரு தரப்புக்கு கசப்பு உணர்வு உண்டு. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்களும் பெரும் சர்ச் சையை கிளப்பின.

''ஓரினச்சேர்க்கை என்பது அந்தக்கால ரோமாபுரி தொடங்கி இன்றுவரை அங்கே இலைமறைக் காயாக இருந்து வரும் விஷயம்.  இந்த மாதிரி சபலத்துக்கு அங்கிருக்கும் சிலர் ஆளாகி இருக்கிறார்கள். இவர்களால் பல சிறுவர்கள் பாதிக் கப்பட்டு இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அவ்வப் போது தலைதூக்கும். பூனைக்கு யார் மணி​கட்டுவது என்று எல்லோரும் கைகளைப் பிசைந்த வேளையில், போப் பெனடிக்ட் இந்த சபலக்கார மனிதர்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டங்களை கொண்டுவந்ததுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுத்தார். இதனால் பல பிஷப்புகள் பதவிவிலக நேர்ந்தது. இந்த நட வடிக்​கைகளை எதிர்த்து கத்தோலிக்க நாடான அயர்லாந்தே போப் மீது அதிருப்தி தெரிவித்தது'' என்றும் சொல்லப்படுகிறது.

அடுத்த போப் ஆண்டவர் யார்?

ஆனால், ''இதுபோன்ற சம்பவங்களுக்கும் போப் பெனடிக்டின் விலகல் அறிவிப்புக்கும் தொடர்பு இல்லை. ஜான் பால் 2 போப் ஆண்டவராக இருந்த போது, 'ஜோசப் ரட்ஜிங்கர்’ என்ற பெயரோடு இருந்த பெனடிக்ட், பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார். அப்போதே அவர் ஓய்வு பெற விரும்பினார். ஆனால், ஜான் பால் 2 மரணம் அடைந்ததால் இவர் போப் ஆனார். ஏற்றுக்கொண்ட பொறுப்பை சரியாக நிறைவேற்ற அவர் தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்தார். ஆனால், அவரது இதயத்தை இயக்க பொறுத்​தப்பட்ட பேஸ்மேக்கர் கருவியின் பேட்டரி பலவீனம் ஆனதால் அதை மாற்ற சில மாதங்களுக்கு முன் அவருக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதனால், போப் ஆண்டவரே சொல்லி இருப்பது போல அவரது மன வலிமையும், உடல் வலிமையும் குறைந்து போனதுதான் அவருடைய விலகலுக்கு காரணம்!’ என்று, வாடிகனின் செய்தித் தொடர்​பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த போப் ஆண்டவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள பயபக்தியோடு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒரு பக்கம் காத்திருக்க... இன்னொரு பக்கம் இதையே பந்தயத்துக்கான கருப்பொருளாகக் கொண்டு பல நூறு கோடிகள் பந்தய பணமும் கைமாறி வருகின்றன!

- வேல்ஸ்