Published:Updated:

நில அபகரிப்பு புகார்: என்.கே.கே.பி. ராஜா கைது

நில அபகரிப்பு புகார்: என்.கே.கே.பி. ராஜா கைது

நில அபகரிப்பு புகார்: என்.கே.கே.பி. ராஜா கைது

நில அபகரிப்பு புகார்: என்.கே.கே.பி. ராஜா கைது

நில அபகரிப்பு புகார்: என்.கே.கே.பி. ராஜா கைது

Published:Updated:
நில அபகரிப்பு புகார்: என்.கே.கே.பி. ராஜா கைது

ஈரோடு, ஆக.04,2011

நில அபகரிப்பு புகார்: என்.கே.கே.பி. ராஜா கைது

நில அபகரிப்பு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா கைது செயய்ப்பட்டார். ##~~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரோடு திமுக மாவட்டச் செயலாளரான என்.கே.கே.பி. ராஜாவுடன், மேயர் விஸ்வநாதனும் இன்று அதிகாலை கைதானர்.

பெருந்துறையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் கொடுத்த நில அகபரிப்பு புகாரின் பேரில், என்.கே.கே.பி. ராஜா கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில், ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2007ம் ஆண்டு என்.கே.கே.பி. ராஜாவும், ஈரோடு மேயர் குமார் முருகேஷ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் உள்பட 11 பேர் தனது வீட்டுக்கு வந்து பெருந்துறையில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்த தனக்கு சொந்தமான 60.5 ஏக்கர் நிலத்தை விற்றதாக பலவந்தப்படுத்தி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும், சுப்பிரமணியம் என்பவரிடம் தான் வாங்கி கடனுக்காக இதனை அவர்கள் அபகரித்துக்கொண்டதாகவும் அந்த புகாரில் ராமசாமி தெரிவித்திருந்தார்.

அபகரிக்கப்பட்ட நிலத்துக்கு ஒரு பைசா கூட பணம் கொடுக்கவில்லை என்றும் அவர் அந்த புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 பிரிவு (மோசடி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, அதிமுகவினர் மீதான நில அபகரிப்பு புகார்களை போலீஸாரே சமரசம் செய்து வைப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

"அதிமுகவினர் மீது நில அபகரிப்பு புகார்கள் உண்மையாக வந்தால் கூட - காவல்துறையினர் அதைப் பற்றி வழக்குப்பதிவு செய்வதில்லை. அமைச்சர்களைக் கொண்டு, புகார் மனு கொடுத்தவர்களையே அழைத்துப் பேசி சமாதானம் செய்து புகார் மனுக்களைத் திரும்பப்பெறச் செய்துவிடுகிறார்கள்.

ஆனால், நிலத்தை உண்மையாக விற்றவர்கள் திமுகவினர் மீது புகார் கூறினால், அதைப் பெரிதுபடுத்தி வழக்குப் பதிவு செய்து கைது செய்கிறார்கள்," என்று கருணாநிதி கூறியுள்ளார்.