Published:Updated:

நெருங்கும் தூக்கு... கதறும் சொந்தங்கள்

மாதேஸ்வரன் மலையில் இருந்து நேரடி ரிப்போர்ட்

நெருங்கும் தூக்கு... கதறும் சொந்தங்கள்

மாதேஸ்வரன் மலையில் இருந்து நேரடி ரிப்போர்ட்

Published:Updated:
##~##

து உயிர் உதிரும் காலமோ?

 அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரை அடுத்து குறி வைக்கப்பட்டு இருப்பவர்கள் வீரப்பனின் கூட்டாளிகள். மீசை மாதையன், ஞானபிரகாஷ், பிலவேந்திரன், சைமன் ஆகிய நான்கு பேரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டதால், எந்த நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற மரண மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1991-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ராமாபுரம் காவல் நிலையம் தாக்கப்பட்ட வழக்கிலும் 1993-ம் ஆண்டு பாலாறு வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கிலும் 123 பேரை கைது செய்தது கர்நாடக காவல் துறை. இந்த வழக்குகளில் மீசை மாதையன், ஞானபிரகாஷ், பிலவேந்திரன், சைமன் ஆகிய நான்கு பேரையும் குற்றவாளிகளாக அறிவித்த மைசூர் தடா நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது. இதை

நெருங்கும் தூக்கு... கதறும் சொந்தங்கள்

எதிர்த்து, நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மரண தண்டனை விதித்து 2004-ம் ஆண்டு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. அதைஅடுத்து, குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ய, அதுவும் இப்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. நான்கு பேரும் இப்போது, கர்நாடகாவில் உள்ள பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

கர்நாடக மாநில சிறைத் துறை தலைவர் ககன்தீப், ''கருணை மனு நிராகரிக்கப்பட்ட நான்கு பேருக்கும் இன்னும் 14 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும். தூக்கு போடுவதற்கான தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயிப்பார். இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கும் தெரிவித்து விட்டோம். அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல் அனுப்பி விட்டோம்'' என்று கூறியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் நான்கு பேருடைய குடும்பத்தினரின் மனநிலையை அறிந்துகொள்ள, அவர்களுடைய வீடுகளுக்கும் சென்றோம்.

முதலில் சைமன் வீடு. மாதேஸ்வரன் மலையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் இருக்கிறது தாளப்பெட்டா. அங்கிருந்து 7 கி.மீ. சென்றால் ஒட்டர்தொட்டி. இதுதான் சைமன் பிறந்து வளர்ந்த கிராமம். ஊர்க்காரர்கள் சுட்டிக்காட்டிய திசையில் நடந்து சைமனின் தங்கை ஜெயமேரி வீட்டை அடைந்தோம் ''எங்க அப்பா பேரு அந்தோணி. எங்ககூட பிறந்தவங்க நாலு பொண்ணுங்க, மூணு பசங்க. சைமன் 5-வது பையன். சின்ன வயசா இருக்கும்போதே எங்க அம்மா இறந்துட்டாங்க. யாருக்கு எந்தப் பிரச்னைன்னாலும் சைமன் ஓடிப்போய் உதவி செய்வான். எந்த ஒரு தப்புத் தண்டாவுக்கும் போக மாட்டான். சத்தியமா அவன் நிரபராதி. காலையில வீட்டுல படுத்துட்டு இருந்த பையனை, அதிரடிப்படை போலீஸ்காரங்க 'வாடா பஸ் ஸ்டாண்ட் பக்கம் போகலாம்’னு கூட்டிட்டுப் போனாங்க. 25 வயசுல கூட்டிட்டுப் போய் 24 வருஷமா சிறையில் வச்சிருந்து இன்னைக்கு தூக்குல போடப்போறோன்னு சொல்றாங்களே... இது நியாயமா?'' எனத் தேம்பித் தேம்பி அழுதார் ஜெயமேரி.

நெருங்கும் தூக்கு... கதறும் சொந்தங்கள்

ஒட்டர்தொட்டியை அடுத்து 7 கி.மீ. மலைப்பாதையில் சென்றால் பெரிய மார்டள்ளி என்ற மலைக்கிராமம். இதுதான் பிலவேந்திரனின் சொந்த ஊர். பிலவேந்திரனின் மனைவி கமலாமேரி, ''நாங்க வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. எந்த ஒரு தவறுக்கும் போக மாட்டோம். அவரும் நல்லாப் படிச்சவர். எங்களுக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க. அவங்களும் படிச்சுட்டு இருந்தாங்க. அதிரடிப்படையால் பல பிரச்னைகள் வருது, தேவைஇல்லாம கேஸ் போடுறாங்கன்னு ஈரோட்டுக்கு வேலைக்குப் போயிட்டார். அப்ப அவருக்கு 38 வயசு இருக்கும். சும்மா விசாரிக்கணும்னு போன் செஞ்சு வரச்சொல்லி கூட்டிட்டுப் போய், ஜெயில்ல அடைச்சுட்டாங்க. இன்னைக்கு வருவார், நாளைக்கு வருவாருனு 20 வருஷமா எதிர்பார்த்துட்டு இருந்தோம். இப்ப தூக்குன்னு சொல்றாங்களே...'' என்று கதற... அருகில் இருந்த அவரது மகள் ஜோஸ்வின், ''நாங்க தமிழரா பிறந்தது தப்பா சார்? சத்தியமா எங்க அப்பா வீரப்பனை பார்த்ததுகூட கிடையாது. வீரப்பன் இருந்தபோதும் நாங்க அதிரடிப்படையால் செத்துச்செத்துப் பிழைச்சோம். இப்ப அரசாங்கத்தால செத்துச் செத்துப் பிழைக்கிறோம். எங்க அப்பாவை தூக்குல போட்டா, நாங்க குடும்பத்தோட பெல்காம் சிறையில் தீக்குளிப்போம்'' என்றார்.

நெருங்கும் தூக்கு... கதறும் சொந்தங்கள்
நெருங்கும் தூக்கு... கதறும் சொந்தங்கள்

பெரிய மார்டள்ளியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இன்னொரு மலைக்கிராமம் சந்தனப்பாளையம். இதுதான் ஞானபிரகாஷின் சொந்தக் கிராமம். ஞானபிரகாஷின் மனைவி செல்வமேரியைச் சந்தித்துப்

நெருங்கும் தூக்கு... கதறும் சொந்தங்கள்

பேசினோம். ''நானும் எங்க வீட்டுக்காரரும் பக்கத்துல இருக்கும் சர்ச்ல வேலை பார்த்துட்டு இருந்தோம். அதிரடிப்படை போலீஸ்காரங்க வந்து, விசாரிக்கணும்னு சொல்லி எங்க வீட்டுக்காரரை கூப்பிட்டாங்க. சர்ச்ல இருந்த ஃபாதர்கிட்ட சொல்லிட்டு, அவரைக் கூட்டிட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் அவரை விடவே இல்லை. எங்களுக்கு நாலு குழந்தைங்க. அவரைப் போலீஸ் பிடிச்சிட்டுப் போனப்ப பெரிய பொண்ணுக்கு ஆறு வயசு. அப்பான்னா அவளுக்கு உசிரு. அப்பாவைப் பார்க்காத ஏக்கத்துலயே அழுது, உடம்பு சரியில்லாமப் போய் செத்துட்டா. புள்ளை செத்ததுக்குக்கூட அவரை ஜெயில்ல இருந்து விடலை. செத்துப்போன என் பொண்ணை ஜெயிலுக்குத் தூக்கிட்டுப்போய் அவருகிட்ட காட்டிட்டு வந்தேன். அவருக்கும் வீரப்பனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க. செய்யாத தப்புக்கு அவரு தண்டனையை அனுபவிச்சிட்டு இருக்காரு. உசிரோட இருக்காருங்குற நெனப்புல இத்தனை வருஷத்தை ஓட்டிட்டோம். இப்போ அவரைத் தூக்குல போடுறதா சொல்றாங்க. அவரைத் தூக்குல போட்டாங்கன்னா நாங்களும் குடும்பத்தோட தூக்கு மாட்டி சாவுறதைத் தவிர வேறவழி இல்லைங்க'' என்று கதற, அருகில் இருந்த அவரது மகள் பெனிட்டா மேரியும் தேம்பித் தேம்பி அழுதார்.

மாதேஸ்வரன் மலையில் இருந்து கீழே இறங்கினால் மேட்டூர் செல்லும் வழியில் இருக்கிறது கருங்கல்லூர். இங்கிருந்து சற்று உள்வாங்கி இருக்கும் கிராமம் கோட்டுமடுவு. இந்தத் தமிழகக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். வீரப்பன் போலவே மீசை வைத்திருந்ததாலும் அந்த ஊரில் வேறு சில மாதையன் இருந்ததாலும், இவரை 'மீசை’ மாதையன் என்று சொல்வார்களாம். மாதையனைப் போலீஸ் பிடித்துச் சென்றதில் இருந்தே பிரம்மைப் பிடித்தவர்போல இருக்கிறார் அவரது மனைவி தங்கம்மாள். யாரிடமும் பேச மாட்டாராம். பக்கத்தில் இருக்கும் அவரது உறவினர்கள் சாப்பாடு கொடுத்தால் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவாராம். யார் எதைக் கேட்டாலும் அழ ஆரம்பித்து விடுகிறார். தங்கம்மாளிடம் பேச்சுக் கொடுத்தோம். ''எஞ்சாமியைப் போலீஸ் பிடிச்சுட்டுப் போயிடுச்சு... நீங்க அவங்ககிட்ட சொல்லி விட்டுடச் சொல்லுங்கய்யா... உங்களுக்குப் புண்ணியமாப் போகும்...'' என்று கதறினார். மாதையனுக்குத் தூக்கு என்பதைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் தங்கம்மாள் இல்லை.

இந்த நிலையில் சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, ''அந்த நான்கு பேரும் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள். தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அப்பாவிகளின் உயிரைக் காக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

தூக்குத் தண்டனைக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து இருக்கின்றன.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்