Published:Updated:

சென்னை வழியாக மதுரை-மும்பை விமான சேவை மீண்டும் தொடக்கம்!

சென்னை வழியாக மதுரை-மும்பை விமான சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னை வழியாக மதுரை-மும்பை விமான சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னை வழியாக மதுரை-மும்பை விமான சேவை மீண்டும் தொடக்கம்!

சென்னை: மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மீண்டும் விமான சேவையை ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தொடங்கியுள்ளது.

மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு சென்று, மீண்டும் அதே மார்க்கத்தில் திரும்பி மதுரை வரும் வருமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று (5ஆம் தேதி) முதல் தொடங்கியுள்ளது.

இந்த விமானம் தினந்தோறும் பிற்பகல் 2 மணிக்கு மதுரையில் புறப்பட்டு 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும். மீண்டும் சென்னையில் இருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மும்பை சென்றடையும்.

ஏற்கனவே, சென்னையில் இருந்து மதுரைக்கு 7 விமான சேவைகள் நடந்து வருகின்ற நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ள புதிய சேவையால் சென்னை - மதுரை இடையேயான விமான சேவை 8 ஆக உயர்ந்துள்ளது.