Published:Updated:

தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் தரம் உயர்வு

தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் தரம் உயர்வு

தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் தரம் உயர்வு

தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் தரம் உயர்வு

தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் தரம் உயர்வு

Published:Updated:
தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் தரம் உயர்வு

சென்னை, ஆக.12, 2011

தமிழகத்தில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ##~~##

சட்டப்பேரவையில் இன்று அவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையின் விவரம்:

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது மனித வளம்தான். மனித வள மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுவது கல்வி. கல்வியில் மேம்பட்ட சமுதாயத்தால் தான் வளர்ச்சிக் குறியீடுகளை எளிதாக அடைய இயலும். அந்த வகையில்தான் எனது தலைமையிலான அரசு கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, மாநிலத்தில் உள்ள 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகளில் அறிவியல் பிரிவு மட்டும் தான் இதுவரை துவக்கப்பட்டு வந்தது. மேலும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் போது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள்; மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படுவதுடன், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஒப்பளிக்கப்பட்டு வந்தன.

தற்போது நிலை உயர்த்தப்படும் 100 பள்ளிகளிலும் அறிவியல் பிரிவுடன் கலைப் பிரிவும் துவக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் 100 பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும் என்பதையும்; ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் தமிழ் ஆகிய 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஒப்பளிப்பு செய்யப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் தற்போது நிலை உயர்த்தப்படும் 100 பள்ளிகளில், கூடுதலாக 900 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், வரலாறு, பொருளியல், வணிகவியல் ஆகிய பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைப்பதுடன், இந்தப் பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் வேலை வாய்ப்பு பெறவும் இது வழி வகுக்கும்.

ரூ.45 கோடி செலவு..

மேலும் கடந்த பல ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் போது தமிழ் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு வழங்கப்படாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையும் தற்போது மாற்றப்பட்டு, தமிழ் மொழி பாட ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கப்படுவதால் தமிழ் மொழிப்பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் வேலை வாய்ப்பு பெற இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுவதால், ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 44 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.