Published:Updated:

எங்கே திரும்பினாலும் ஸ்ரீகாந்த்!

எங்கே திரும்பினாலும் ஸ்ரீகாந்த்!

எங்கே திரும்பினாலும் ஸ்ரீகாந்த்!

எங்கே திரும்பினாலும் ஸ்ரீகாந்த்!

Published:Updated:
##~##

ஸ்ரீகாந்த்... அணிந்திருந்தது காக்கிச் சட்டை என்றாலும் அழகான எழுத்தாளர். கடுமையான அதிகாரி என்றாலும் இனிய இயற்கை ஆர்வலர்.  ஜூனியர் விகடனில் சில வருடங்களுக்கு முன், 'மறத்தல் தகுமோ’ என்ற மறக்க முடியாத தொடரை எழுதிய டாக்டர் பா.ஸ்ரீகாந்த் ஐ.பி.எஸ்., இன்று நம்முடன் இல்லை. 

அந்தமான்- நிகோபார் தீவில் உள்ள கார் நிகோபார் எஸ்.பி-யாகப் பணியாற்றிய ஸ்ரீகாந்த், கடந்த 10-ம் தேதி காலையில் வாக்கிங் செல்லும்போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்து விட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தமான் நிகோபார் தீவுகளின் பழங்குடி இன மக்கள் நலத் துறை செயலாளர் தேவநீதிதாஸ் ஐ.ஏ.எஸ்., ஸ்ரீகாந்த்தின் நெருங்கிய நண்பர். ஸ்ரீகாந்த் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் தேவநீதிதாஸ்.  

எங்கே திரும்பினாலும் ஸ்ரீகாந்த்!

''என்னுடைய ஆலோசனைப்படிதான் அவர் அந்தமானுக்கு மாறுதலாகி வந்தார். பழங்குடியினர் விஷயத்தில் மிகவும் ஆர்வ​மானவர். மார்ச் மாத இறுதியில் நாங்கள் சென்ற ஒரு ட்ரிப்பைப் பற்றிச் சொல்கிறேன். எங்களது தலைமைச் செயலாளர் ஆனந்த் பிரகாஷ், 'என் நிர்வாகத்தில் உள்ள எல்லைப் பகுதிகளை நான் முழுமையாகப் பார்க்கவில்லையே?' என்றார். இதைக் கேட்ட ஸ்ரீகாந்த், 'நான் உங்களுக்குக் காட்டுகிறேன்' என்று அழைத்தார். நான், மாவட்ட கலெக்டர் ஜவஹர் உள்பட சில முக்கிய அதிகாரிகளும் ஸ்ரீகாந்த்துடன் படகில் கிளம்பினோம். நிகோபார் மாவட்டம் கச்சால் தீவுக்கு முதலில் சென்றோம். அங்கே 200-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றன. 1971-ம் வருடம் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்த தமிழர்களை இந்திய அரசு அந்தத் தீவில் குடியமர்த்தியதாம். அவர்களின் குறைகளை தலைமைச் செயலாளர் கேட்டார். அந்த மக்கள் ஸ்ரீகாந்த்துக்கு நன்றி சொன்னார்கள். அங்கிருந்து 2 மணி நேரம் கடல் பயணத்தில் டில்லாங் சோங் என்ற தீவை அடைந்தோம். இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த கிரிமினல்களை விரட்டி​யடிப்பதற்காக அங்கே ஸ்ரீகாந்த் ஏற்பாட்டின் பேரில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள். 10 போலீஸார் பணியில் இருக்கின்றனர். மாதம் ஒரு முறை ஷிஃப்ட் முறையில் மாற்றுவார்கள். பரந்துவிரிந்த அந்தத் தீவில் மனித நடமாட்டமே கிடையாது. மின்சாரமோ வேறு எந்தத் தொடர்புமோ கிடையாது. அந்த தீவைப் பார்வையிடும் முதல் தலைமைச் செயலாளர் ஆனந்த் பிரகாஷ். அவரைப்

எங்கே திரும்பினாலும் ஸ்ரீகாந்த்!

பத்திரமாக அழைத்துச் சென்றார் ஸ்ரீகாந்த். அங்கு பணியில் உள்ள போலீஸாரை உற்சாகப்படுத்தும் வகையில், ஸ்ரீகாந்த் பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தார்.

கிரேட் நிகோபார் தீவில் ஷோம்பென் பழங்குடி மக்களைச் சந்தித்தோம். ஆடை, நாகரிகம் என்பதே தெரியாதவர்கள். அவர்கள் பேசும் மொழியை இந்தியில் மொழிபெயர்த்துச் சொல்லும் நபர் உதவியுடன் அவர்களின் குறைகளைத் தலைமைச் செயலாளர் கேட்டார். அவர்களுக்கு உதவுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்தார். இந்த நிகழ்வை தனது வாழ்நாள் சாதனையாக ஸ்ரீகாந்த் என்னிடம் சொல்லி நெகிழ்ந்ததை மறக்க முடியாது. ஸ்ரீகாந்த் இன்று என்னுடன் இல்லை என்பதை நினைக்கவே முடியவில்லை. இந்தத் தீவில் அவரது கால் படாத

எங்கே திரும்பினாலும் ஸ்ரீகாந்த்!

இடமே இல்லை. எங்கே திரும்பினாலும் ஸ்ரீகாந்த் நிற்பது போலவே தெரிகிறது. நண்பா... எங்களைவிட்டுப் பிரிய உனக்கு என்ன அவ்வளவு அவசரம்?'' எனக் கண் கலங்குகிறார்.

அந்தமான் - நிகோபார் தீவுகளை ஒட்டிய கடல் பிரதேசம் வழியாக ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ரகசியப் படகில் செல்வார்கள். சமீபத்தில் ஒருநாள்... ரகசியப் படகில் சென்ற 30-க்கும் மேற்பட்ட அகதிகள், இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிவிட்டனர். அவர்கள் பிடிபட்டது, கார் நிகோபார் தீவு அருகே. அங்கிருந்து அவர்களை மேற்கு வங்காளத்துக்குக் கொண்டுபோய் கோர்ட்டில் ஒப்படைக்கும் பொறுப்பு போலீஸுக்கு வந்தது. ஈழத் தமிழர்களின் பரிதாப நிலையைப் பார்த்த ஸ்ரீகாந்த் மனம் கலங்கி​னாராம். பல நாட்கள் சாப்பிடாத சோகம் ததும்பிய அவர்கள், இவரைப் பார்த்ததும் கண்ணீர் விட்டிருக்கின்றனர்.

அவர்களிடம் நீண்ட நேரம் பேசிய ஸ்ரீகாந்த், ஏழ்மைதான் அவர்கள் அப்படித் தப்பிப் போகக் காரணம் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டாராம். போலீஸுக்கே உரித்தான டெக்னிக்கல் காரணங்களை மேலிடத்துக்குச் சொல்லி, அவர்களை இரண்டு நாட்கள் கார் நிகோபாரில் தற்காலிகமாகத் தங்கவைத்தாராம். இரண்டு நாட்களும் சாப்பாடு கொடுத்து, மருத்துவர்களை வரவழைத்து அவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்து, அவர்கள் தெளிவான பிறகே கோர்ட்டுக்கு அனுப்பிவைத்தாராம்.

மிஸ் யூ சார்

- பாலகிஷன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism