'இந்திரா காந்தியின் வாரிசு அரசியலுக்கு வரலாம்... என் மகன்

. அரசியலுக்கு வரக் கூடாதா? என்.டி.ஆர் பேரன் நடிக்கலாம், என் பேரன் நடிக்கக் கூடாதா?' - தங்களது குடும்பத்தைப்பற்றி யாராவது விமர்சனம் செய்தால், இப்படிப் பேசி வாரிசு அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், ''உங்களுக்கு அடுத்து ஸ்டாலின்தான் கட்சித் தலைவரா?'' என்று கேட்டால், ''திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல...'' என்று சொல்வார். அதாவது, கேள்வி கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தே அவரது பதில்கள் அமையும்!.
'கட்சித் தலைவருக்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை’ என தி.மு.க-வின் அமைச்சர்களும் வரிந்து கட்டிக்கொண்டு வாரிசு அரசியலை வளர்க்கிறார்கள். காலம் காலமாகக் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் அடிமட்டத்திலேயே கிடக்க... வாரிசு என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக்கொண்டு, கட்சியில் பதவிக்கு வந்து 'சரசர’வென உச்சத்தைத் தொட்டுவிடப் பலரும் துடிக்கிறார்கள். கழகக் குடும்பங்களின் கதை இதோ...

மருமகன் மட்டும் போதாது!

சுகாதாரத் துறை அமைச்சரும், கடலூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொடக்க காலத்தில் இருந்து தன் அக்கா மகன் செந்தில்குமாரைத் தன் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினார். 'மருமகன் மட்டும் போதாது’ என நினைத்த பன்னீர்செல்வம், தற்போது தன் ஒரே மகனான 21 வயதான கதிரவனை அரசியல் களத்தில் இறக்கிவிட்டு புதிய வாரிசை வளர்த்து வருகிறார். 'கட்சி போஸ்டர்கள், பேனர்களில் கதிரவன் படம் மெகா சைஸில் இடம் பெற வேண்டும்’ என்பது எம்.ஆர்.கே-வின் வாய்மொழி உத்தரவு. 'நாளைய கடலூர் மாவட்டமே’, '2016-ல் தமிழக விடிவெள்ளியே...’ என்றெல்லாம் கதிரவனை வாழ்த்தி, பேனர்கள் மாவட்டம் முழுக்க பளபளக்கின்றன!

சிகாமணி அண்டு கோ!

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி தளபதி நற்பணி மன்றத்தின் தலைவர். அப்பா நடத்தும் சூர்யா பொறியியல் கல்லூரியின் தாளாளரும் இவரே. கட்சி விழாக்கள், அரசு விழாக்களில் தனது ஆதரவாளர்களுடன் ஆஜராகிவிடுவார் கவுதம். 'தளபதியின் தளபதியே’, 'உயர் கல்வியின் வாரிசே...’ என்றெல்லாம் ஆதரவாளர்கள் முழங்குவார்கள். இப்போதெல்லாம் விழுப்புரம் மாவட்ட தி.மு.க-வினர் அடிக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும் பொன்முடி, பொன்முடியின் மனைவி, கவுதம் சிகாமணி, அவர் மனைவி, குழந்தைகள், பொன்முடியின் தம்பிகளான அந்த சிகாமணி, இந்த சிகாமணி என்ற 'சிகாமணி வகையறா’க்களின் படங்கள் கட்டாயம் இடம் பெறும். பொன்முடி, வரும் தேர்தலில் மகனுக்கு விட்டுக்கொடுத்து, தனது தொகுதியையே மாற்றிக்கொள்ளக்கூடும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது!

'கம்பன் எங்கே போனான்?'

விழுப்புரத்தைத் தாண்டி அப்படியே திருவண்ணாமலைக்கு வந்தால்... அமைச்சர் எ.வ.வேலு. அவர் அமைத்த கல்வி வளாகங்களைக் கவனித்து வருகிறார் மகன் கம்பன். அதை மட்டும் பார்த்தால் போதுமா? தனக்குப் பின்னால் மாவட்டக் கழகம் இவரது கைக்குத்தான் போக வேண்டும் என்று வேலுவும் விரும்புகிறாராம். கட்சிக்காரர்கள் தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம், 'கம்பன் எங்க போயிட்டான். அவனை வரச் சொல்லுங்க...’ என கூப்பிட்டு பக்கத்தில் வைத்துக்கொள்வாராம் வேலு. கம்பன் பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு கலைக் கல்லூரியின் இயக்குநரான கம்பன், கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கிறார். விளையாட்டுப் போட்டிகள், மரக்கன்று நடுதல் என்று கட்சியில் வேரூன்றி வருகிறார்!

கில்லாடி தம்பி!

அமைச்சர் துரைமுருகனின் அரசியல் வாரிசாக அவரது தம்பி துரைசிங்காரம் வளர்ந்துகொண்டு இருக்கிறார். மாவட்டம் முழுவதும் தொண்டர்களால் அறியப்பட்ட சிங்காரம், மேல்மட்ட அரசியல் செய்வது, தன் அண்ணன் கலந்துகொள்ள முடியாத தொகுதி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவது போன்றவற்றைச் செய்கிறார். அதே சமயம், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் அரசியலை ஏக்கமாகப் பார்த்து வருகிறார். 'தம்பியா... மகனா?’ என்ற சிக்கல் துரைமுருகனுக்கு வரலாம்!

துணைவியின் மகன்!

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவியின் மகன் ராஜாவுடன் வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவி லீலாவின் மகன் பிரபுவும் அரசியலில் தற்போது வளர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில், முதல்வர் தலைமையில் கோலாகலமாக பிரபுவுக்குத் திருமணம் நடந்தது. வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாளில்... அநாதை இல்லத்துக்கு சாப்பாடு, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப் போவதாக போஸ்டர் அடித்து பிரகடனப்படுத்திக்கொண்டது பிரபு தரப்பு. வீரபாண்டியாரின் சாயலில் பிரபு அப்படியே இருப்பதால், 'சின்ன வீரபாண்டியாரே!’ என்றுதான் கட்சி வட்டாரம் அழைக்கிறது. கட்சி போஸ்டர்களிலும் பிரபுவின் படம் இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது!

மகனா... மருமகனா?

பைந்தமிழ் பாரி - அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன். கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத் தலைவர். இவரையே தனது அரசியல் வாரிசாகக் கொண்டுவர தொடக்கத்தில் திட்டமிட்டார் பொங்கலூரார். ஆனால், பரபர அரசியலில் சின்னச் சின்னச் சர்ச்சைகளில் பாரி சிக்கிக்கொண்டார். இதைத் தொடர்ந்து தன் மருமகன் டாக்டர் கோகுலைக் கொண்டுவந்து இருக்கிறார் அமைச்சர். கோகுல் துணை முதல்வருக்கு மிக நெருக்கமானவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதிக்கு அவரை வேட்பாளராக அறிவிக்கும் முடிவுக்கு வந்துவிட்டது கட்சித் தலைமை. ஆனால், பொங்கலூராரின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், வேட்பாளர் மாற்றப்பட்டார் என்று தகவல். இந்த முறை, 'ஸீட்டை மகனுக்கு கேட்பதா... மருமகனுக்குக் கேட்பதா?’ என்ற புரியாத குழப்பத்தில் இருக்கிறாராம் பொங்கலூரார்!

ஆணையிட்டால் அலறும்!

கே.என்.நேருவுக்கு நிகரான மரியாதை அவரது சகோதரரான கே.என்.ராமஜெயத்துக்கு திருச்சி மாவட்டக் கட்சிக்காரர்களால் வழங்கப்படுகிறது. ஏராளமான நிலபுலன்கள், ஆசியாவின் நவீன அரிசி ஆலைகள், பொறியியல் கல்லூரி நிர்வாகம், ஜனனி குரூப் எனப் பல தொழில்கள் இருப்பதாலும், அண்ணன் நேருவுக்கு சகலமுமாக இருப்பதாலும், இவரிடம் மரியாதை அளிப்பவர்களைவிட... பயத்தில் பம்மிக்கிடப்பவர்கள் அதிகம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட முயற்சித்தார் ராமஜெயம். ஆனால், அதை நெப்போலியன் தட்டிப் பறித்தார் (அவரும் இவர்கள் குடும்பத்துக்காரர்தானே!). இப்போது தொகுதியை எதிர்பார்த்து வருகிறார் ராமஜெயம்!

கலக்கும் கருணைராஜா!

திருச்சி தி.மு.க-வில் நேருவுக்கு சீனியர் வனத் துறை அமைச்சர் செல்வராஜ். இடையில், ம.தி.மு.க-வுக்குப் போய் வந்ததால், கொஞ்சம் அவருக்கு இறங்கு முகம். ஆனால், அமைச்சராகி மீண்டும் தன் பவரைத் தக்கவைத்து வருகிறார். இவரது மகன் கருணைராஜா திருச்சி புறநகரில் கலக்குகிறார். கான்ட்ராக்ட் பணிகளை எடுத்துச் செய்து வந்தாலும், சாதி அடையாளத்தை முன்னிலைப்படுத்தி முத்தரையர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். செல்வராஜின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடித்தால், கட்டாயம் கருணைராஜாவின் படத்தையும் போட்டு, அண்ணனின் அரசியல் வாரிசு என்று புளகாங்கிதம் அடைகிறார்கள்!

'உனக்கு இன்னும் வயசு இருக்கு!'

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தம்பி, கே.கே.எஸ்.எஸ்.வி.டி. சுப்பாராஜ் விருதுநகர் மாவட்டத்துக்கு அறிவிக்கப்படாத அமைச்சர்! இந்த முறை தனக்கு ஸீட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என அண்ணனிடம் கறாராகவே சொல்லி இருக்கிறாராம் சுப்பாராஜ். தம்பி ஒரு பக்கம் எம்.எல்.ஏ. கனவில் மிதக்க... அமைச்சரின் மகன் ரமேஷ§க்கும் அதே ஆசை. 'உனக்கு இன்னும் வயசு இருக்குடா தம்பி. சித்தப்பாவும் ஸீட் கேட்குறாரு. அதனால், நீ கொஞ்சம் பொறுமையா இரு...’ என மகனை அடக்கிக்கொண்டு இருக்கிறாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்! ரமேஷ் என்ன நினைக்கிறார் என்பது தேர்தலில் தெரியும்!

விடாப்பிடி அப்பா!

அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் சுப.த.சம்பத், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். தந்தைக்குத் தொகுதி தரப்படும்போது, தனியாகத் தனக்கும் கேட்கும் வழக்கம் இதுவரைக்கும் சம்பத்துக்கு இல்லை. இம்முறை தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 'எனக்கு ஸீட் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. என் மகனுக்கு ஸீட் கொடுத்தே ஆக வேண்டும்’ என்பதில் தங்கவேலன் விடாப்பிடியாக இருக்கிறாராம். தங்கவேலனுக்கு வயதாகிவிட்டதால் அவர் மகனை இறக்கிவிட்டு அமைதியாகிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது!

ஐ.பி.எஸ்-க்கு மரியாதை!

திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் வாரிசு ஐ.பி.செந்தில்குமார். கட்சி வட்டாரத்திலோ, 'ஐ.பி.எஸ்.’ என்று சொன்னால் போதும்! கடந்த ஐந்து வருடங்களில் ஐ.பி.எஸ்-ஸின் வளர்ச்சி அசுர வேகமானது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐ.பி.எஸ். தலையீடு இல்லாத அரசுத் துறைகளே இல்லை. கட்சிக்காரர்களும் சரி... அதிகாரிகளும் சரி... அமைச்சருக்கு என்ன மரியாதை கொடுக்கிறார்களோ, அதைவிட ஒரு மடங்கு மரியாதை ஐ.பி.எஸ்-க்கு அதிகமாகவே கொடுக்கிறார்கள். இரண்டு பேருமே இப்போது தொகுதியை எதிர்பார்க்கிறார்கள்!

'எனக்கு பிறகு இவன்தான்!'

கோ.சி.மணிக்கு வயதாகிவிட்டது. அடிக்கடி உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. அதனால், தன் மகன் இளங்கோவனைக் கட்சியில் முன்னிறுத்திக்கொண்டு இருக்கிறார். தான் போகும் இடமெல்லாம் இளங்கோவனையும் அழைத்துக்கொண்டு போய், 'எனக்குப் பிறகு எல்லாமே இவன்தான்... நீங்கதான் இவனைப் பொறுப்பா பார்த்துக்கணும்...’ என்று அறிமுகப்படுத்துகிறாராம். 'எனக்கு ஸீட் வேண்டாம் தலைவரே... எம் பையனுக்கு ஸீட் கொடுத்துடுங்க!’ என்று கருணாநிதியிடம் இவர் சொல்லிவிட்டாராம்!

பேராசிரியரும்..!

நிதி அமைச்சர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன், இம்முறை தேர்தலில் நிற்பதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார். கடந்த எம்.பி. தேர்தலிலேயே தனக்கான கோட்டாவாக வெற்றியழகனுக்கு வாய்ப்பை எதிர்பார்த்தார் அன்பழகன். இந்த முறையும் கேட்பார். பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைத் தேர்தலில் கடும் போட்டிக்கு நடுவே வென்ற வெற்றியழகன், கிரானைட் தொழிலில் இருக்கிறார். அன்பழகன் நிற்கவில்லை என்றால் வெற்றியழகன் நிச்சயம் நிற்பார்!

இந்தக் கட்டுரையை எழுதும்போதுதான், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி இல்லத் திருமணத்தை நடத்திவைத்து கருணாநிதி, ''அமைச்சராக இருந்த பிச்சாண்டி அதன்பிறகு அந்தப் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார். மற்றவர்களுக்கு வழிவிடுகின்ற பெருந்தன்மை எல்லோர்க்கும் வந்துவிடுவது இல்லை!'' என்று பேசியிருக்கிறார்!

யாருக்கு யார் விட்டுக்கொடுக்கிறார்கள் என்ற வீட்டு விவகாரத்தைவிட, மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நாட்டு விவகாரம்தான் வாரிசுகளின் தகுதிக்கு மார்க் போட வேண்டும்!

ஒன்று நிச்சயம்... 'கட்சி என்ன குடும்பச் சொத்தா?' என்று தி.மு.க-வில் யாரும் உரக்கப் பேச முடியாது!

- கேள்வியின் நாயகன்