தினத்தந்தி நாளிதழின் அதிபர் பா.சிவந்தி ஆதித்தன், கடந்த மார்ச் 6-ம் தேதி எப்போதும்போல அலுவலகத்துக்கு வந்து சுறுசுறுப்புடன் பணிகளைக் கவனித்தார். அன்று நள்ளிரவில்தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இங்கு ஓரளவுக்கு சிகிச்சை அளித்து விமானத்தில் செல்லும் அளவுக்கு தேறிய பிறகு, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால், கடந்த 19-ம் தேதி இரவு உயிர்நீத்துவிட்டார் பா.சிவந்தி ஆதித்தன்.

தினத்தந்தி நாளிதழின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சிவந்தி ஆதித்தனின் நேரடி உதவியாளராக இருந்த சண்முகநாதனிடம் பேசினோம். ''எழுத்து என்பது வேறு. நிர்வாகம் என்பது வேறு. ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த கல்கி, மிகச் சிறந்த எழுத்தாளர். சிறந்த நிர்வாகியாக

இருந்து எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ஆனந்த விகடனை விற்பனையில் மிக உயர்ந்த இடத்தைப் பிடிக்கவைத்தார். அதேபோல், தினமணி நாளிதழிலும் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தனர். அங்கு கோயங்காவின் மிகச் சிறந்த நிர்வாகத்தால்தான் அந்தப் பத்திரிகை மிக உயர்ந்த இடத்தை அடைந்தது. அதேபோலத்தான், தினத்தந்தியின் நிர்வாகத்தைத் தூக்கி நிறுத்தியவர் சிவந்தி ஆதித்தன்.

'எளிய நடையை நான் அறிமுகம்செய்து பாமரரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு செய்திகளை வெளியிட்டாலும், இந்த நாளிதழை ஏராளமானோர் கையிலும் கொண்டுபோய்ச் சேர்க்கும் அளவுக்குத் திறம்பட நிர்வாகம் செய்யும் திறமை, சிவந்தி ஆதித்தனைவிட எனக்குக் குறைவுதான். அதனால், நான் செய்திப் பிரிவை மட்டும் கவனித்துக்கொண்டு, நிர்வாகப் பொறுப்பை சின்னைய்யாவிடம் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறேன்’ என்று ஐயா சி.பா.ஆதித்தனாரே ஒருமுறை எங்களிடம் கூறினார். சின்னைய்யா மிகச் சிறந்த நிர்வாகி. அவரது திறமையால்தான் தினத்தந்தி மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது. எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டு இருப்பார். விற்பனையில் தினத்தந்தி மிகப் பெரும் சாதனை படைத்து இருக்கிறது என்றால், அதற்கு சின்னைய்யாவின் கடும் உழைப்புதான் காரணம். நேரு இறந்தபோது தினத்தந்தி 5 லட்சம் பிரதிகள் விற்பனையானது. அது அப்போது மிகப் பெரும் சாதனை. அச்சிடுவது, எல்லா ஊர்களுக்கும் அனுப்புவது, விற்பனையைக் கண்காணிப்பது என்பதெல்லாம் மிகப் பெரும் பணி. அத்தனை பணிகளையும் ஒருசேரக் கவனித்து, எந்த இடத்திலும் சிறு தவறும் நேராமல் பத்திரிகையை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார். அதே நேரத்தில், எந்த செய்திக்கு முக்கியத்துவம், எது எந்த அளவில் வர வேண்டும் என்பதிலும் அவரது தந்தைக்கு இணையான திறமையைப் பெற்றவர்'' என்று நினைவுகூர்ந்தார் சண்முகநாதன்.

தினத்தந்தி மற்றும் ராணி வார இதழின் ஆசிரியராக இருந்த ஓய்வுபெற்ற அ.மா.சாமி, ''தினத்தந்தி

நாளிதழின் உரிமையாளராக தனது தந்தை சி.பா.ஆதித்தனார் இருந்தபோதும் அந்தப் பத்திரிகையில் ஓர் ஊழியராகத்தான் சேர்க்கப்பட்டார் சிவந்தி ஆதித்தன். அச்சுக் கோர்ப்பவர், இயந்திரத்தை இயக்குபவர், பிழை திருத்துபவர், நிருபர், உதவிஆசிரியர் என்று ஒரு நாளிதழின் அத்தனைப் பிரிவுகளிலும் வேலை பார்த்து அனுபவம் அடைந்தார். இரண்டு ஆண்டுகள் இந்தப் பயிற்சியை முடித்த பிறகு 1960-ம் ஆண்டில் 'நெல்லை மாலைமுரசு’ தொடங்கப்பட்டு, அதன் முழுப் பொறுப்பும் சிவந்தி அய்யாவிடம் வழங்கப்பட்டது. அதைத் திறம்பட நடத்திவந்த நேரத்தில்தான், ஆதித்தனார் அய்யா அரசியலில் முழுக் கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தார். அதனால், தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்பை சின்ன அய்யாவிடம் வழங்கினார். பொதுவாக, ஒன்றை இரண்டாக்க வேண்டும் என்பார்கள். ஆனால், மூன்று பதிப்புகளுடன் தந்தை கொடுத்துவிட்டுச் சென்ற தினத்தந்திக்கு இன்று 15 பதிப்புக்கள். ஒரு கோடிக்கும் அதிகமான வாசகர்கள். அதேபோல் ஊழியர்கள் மீதும் அக்கறையும் பாசமும் வைத்து இருப்பார். எத்தனையோ எழுத்தாளர்கள், கவிஞர்கள் அய்யாவிடம் உதவி கேட்டு வருவார்கள். அவர்களுடைய படைப்புகளை வாங்கிக்கொண்டு அவர்களே எதிர்பார்க்காத தொகையை வழங்குவார். அப்படி வாங்கிவைத்த எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள் இன்றும்கூட வெளியிடப்படாமல் இருக்கின்றன. ஒருமுறை ஒரு கவிஞர் தனது கவிதைகளுடன் வந்தார். அந்தக் கவிஞர் எதிர்பார்க்காத பெரும் தொகையைக் கொடுத்தார். அவரே அதிர்ச்சி அடைந்துவிட்டார். ஆனால், 'நீங்க தமிழுக்குச் செய்றீங்க... நான் உங்களுக்குச் செய்றேன்’ என்றார் அய்யா. அதேபோல், சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது ஆரம்பித்து ஆண்டுதோறும் இரண்டு எழுத்தாளர்களுக்கு வழங்கினார். அவரது சிந்தனை அனைத்தும் பத்திரிகை, தமிழ், எழுத்து என்றே கடைசி வரை இருந்தது.'' என்று தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழில் பத்திரிகைகள் இருக்கும் வரை சிவந்தி ஆதித்தனின் நினைவும் இருக்கும்.

- எஸ்.கோபாலகிருஷ்ணன்