Published:Updated:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, மீனவர்கள் கூட்டாக தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, மீனவர்கள் கூட்டாக தாக்குதல்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, மீனவர்கள் கூட்டாக தாக்குதல்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, மீனவர்கள் கூட்டாக தாக்குதல்!

ராமேஸ்வரம்: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரும், அந்நாட்டு மீனவர்களும் கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினரும், அந்நாட்டு மீனவர்களும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் மீனவர்கள் காசிநாதன், செல்லபாண்டியன், அருண் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரும், அந்நாட்டு மீனவர்களும் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.