Published:Updated:

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை ரூ.2 உயர்வு!

விகடன் விமர்சனக்குழு
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை ரூ.2 உயர்வு!
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை ரூ.2 உயர்வு!
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை ரூ.2 உயர்வு!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை ரூ.2 உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவின் மூலம் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.35க்கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.27க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மாத அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இந்த விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.2 குறைத்து வழங்கப்படுகிறது.

அதேபோல், தனியார் பால் நிறுவனங்கள் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.46க்கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.42க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.38க்கும், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் ரூ.34க்கும் விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில், பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு என பல்வோறு காரணங்களுகாக, தனியார் பால் நிறுவனங்கள் நாளை (6ஆம் தேதி) முதல் லிட்டருக்கு ரூ.2 விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

அதன்படி, கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.48க்கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.44க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.40க்கும், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் ரூ.36க்கும் விற்பனை செய்யப்படும்.

அரசு நிறுவனமான ஆவின் பால் விலை கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை உயர்த்தப்படவில்லை. ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு 10 முறை பால் விலையை உயர்த்தியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 4வது முறையாக பால் விலையை உயர்த்துகின்றன.