Published:Updated:

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

Published:Updated:
கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

''நம் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. நாமே அழித்தால்தான் உண்டு!'' பேரறிஞர் அண்ணா சொன்ன வாக்கியம், அ.தி.மு.க-வுக்கும் நிச்சயம் பொருந்தும். இதை ஜெயலலிதாவும் உணர்ந்தே இருக்கிறார். ''நம் கட்சியை அழிக்கும் சக்தி வெளியில் இல்லை. நாமே அழித்துக்கொண்டால்தான் உண்டு'' என்று அவரும் தேர்தல் வரும்போதெல்லாம், கோஷ்டிப்பூசல்களை மனதில்கொண்டு வார்த்தைகளை உதிர்ப்பார். இதோ... நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.க-வின் கோஷ்டிப்பூசல்கள்தான் அதன் வெற்றிக்கு உலைவைக்கும் என்று அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களே ஆதங்கம் பொங்கப் பேசுகிறார்கள். கோஷ்டி கோதாவில் இறங்கியிருக்கும் நிர்வாகிகளுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா சாட்டையைச் சுழற்ற வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாவட்ட வாரியாக அ.தி.மு.க-வின் கோஷ்டிப்பூசல் நிலவரங்களைக் காண்போம்.

தனி ஆளாகக் கம்பு சுற்றும் செல்லூர் ராஜு!

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

அமைச்சர் செல்லூர் ராஜுவை அப்பிராணி என்று சொன்னது எல்லாம் ஒரு காலம். அமைச்சரவை செயல்பாட்டில்தான் அவர் டம்மியே தவிர, கட்சியில் தனி ஆளாகக் கம்பு சுற்றுவதில் பயங்கரமான ஆள். மதுரை மாநகரில் மட்டும் மேயர் ராஜன் செல்லப்பா அணி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் அணி, ஏ.கே.போஸ் அணி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாங்கம் அணி என்று ஏழெட்டு அணிகள் இருக்கின்றன. அ.தி.மு.க. 'பாரம்பரிய' வழக்கப்படி, யாராவது ஒருவரைக் கவிழ்க்க வேண்டும் என்றால், அவருக்கு எதிரான எல்லா அணிகளும் ஒன்றுசேர்ந்துவிடும். மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக இப்படி எல்லா அணிகளும் ஒன்றுசேர்ந்து பார்த்துவிட்டது. ஆனாலும் நின்று ஆடுகிறார் செல்லூர் ராஜு. வட்டச் செயலாளராக இருந்த செல்லூர் ராஜுவை பகுதிச் செயலாளராக்கி வளர்ச்சிக்கு வித்திட்டவர் எஸ்.டி.கே.ஜக்கையன். என்ன கோபமோ, அமைச்சரானதும் பல மேடைகளில் ஜக்கையனைப் பின்னால் உட்காரச் சொல்லி நெளிய விட்டார் ராஜு. சமீபத்தில் ஜக்கையனுக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி வர, ஒவ்வொரு வட்டச் செயலாளருக்கும் போன் செய்த செல்லூர் ராஜு, 'யாரும் அவருக்கு போஸ்டர் ஒட்டாதீங்க’ என்று சொன்னார். இந்தக் கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு, செல்லூர் ராஜுவின் பிரதான எதிரியான ராஜன் செல்லப்பாவை வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கிறார் ஜக்கையன். ராஜன் செல்லப்பா எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி என்றாலும், அவரும் செல்லூர் ராஜுவிடம் மல்லுக்கட்டி தோற்றுப்போனவர்தான்.

ஒவ்வோர் ஊரிலும் முற்றுகை!

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

மதுரை புறநகரில் ஒவ்வொரு எம்.எல்.ஏ. தலைமையிலும் ஓர் அணி இருக்கிறது. தவிர முன்னாள் அமைச்சர் துரைராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் என்றும் அணிகள் இருக்கின்றன. இவர்களுக்கு எல்லாம் பொது எதிரி, இப்போதைய மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம். சில மாதங்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப் போனவரை, ஒவ்வோர் ஊரிலும் முற்றுகையிட்டுத் திருப்பி அனுப்பினார்கள் இவர்கள். ஒருமுறை இவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, முத்துராலிங்கத்துக்கு எதிரான புகாரோடு சென்னை சென்றனர். அனைவரையும் சமரசப்படுத்தி அனுப்பிவிட்டார் ஓ.பி.எஸ்.

இது போதாது என்று மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு, புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் இடையேயும் இப்போது மோதல். மதுரை மாநகர அ.தி.மு.க. எல்லையை 72 வார்டுகளில் இருந்து 100 வார்டுகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாக நடந்த கூட்டத்தில், இவர்கள் இடையே மோதல் வெடித்தது. அவர்களைச் சமரசப்படுத்தி, புதிய பதவிகளில் ஆளுக்கு சரிபாதி என சமாதானம் சொன்னார் ஓ.பி.எஸ். இருந்தாலும், ரத்தத்தின் ரத்தங்கள் ரத்தம் சிந்தும் சூழ்நிலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிறார்கள்.

காத்திருக்கும் செங்கோட்டையன் கோஷ்டி!

ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் பொதுப் பணித் துறை அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் கோஷ்டி, புறநகர் மாவட்டச் செயலாளரும் வருவாய்த் துறை அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் கோஷ்டி, முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் கோஷ்டி என்று மூன்று கோஷ்டிகளாகப் பிரிந்து மோதிக்கொள்கின்றனர் ஈரோடு அ.தி.மு.க-வினர்.

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?
##~##

செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வகித்து, நேரடியாக  முதல்வரை சந்திக்கும் தகுதி வாய்ந் தவராக இருந்ததால், ஈரோட்டில் இவரைத் தாண்டி வேறு எந்தக் கோஷ்டிகளும் பெரிய அளவுக்கு வளர முடியவில்லை. ஆனால் இப்போது, கட்சியில் அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டதால் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலரும், 'இவரோடு இருந் தால் பலன் இல்லை’ என் பதை உணர்ந்து தோப்பு பக்கம் தாவிவிட்டனர்.

செங்கோட்டையன் ஆதர வாளர்கள் தன் பக்கம் வந்ததாலும் கே.வி.ராமலிங்கத்தின் ஆதிக்கத்தாலும் தவிர்க்க முடியாமல் தோப்பு வெங் கடாசலம் தனக்கான ஓர் ஆதரவு கோஷ்டியை உருவாக்கினார். இவரது கோஷ்டியை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காக, கே.வி.ராமலிங்கம் அடிக்கடி தோப்பு தொகுதிக்குள் மூக்கை நுழைப்பார்.

கே.வி.ராமலிங்கத்துக்கு மாநகரத்துக்குள்ளும் புறநகருக்குள்ளும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த கோஷ்டிகளுக்குள் பல குரூப்கள் இருக்கின்றன. இந்த குரூப்கள் அவ்வப்போது கே.வி.ஆரையே விழுங்க நினைப்பார்கள் என்பதுதான் வினோதம். செங்கோட்டையனின் பதவிகள் பறிக்கப்​பட்டாலும், நிச்சயம் தலைமை மீண்டும் இவருக்கு கட்சியில் உயர் பொறுப்பு கொடுக்கும் என்று கனவுகளோடு செங்கோட்டையனை ஆதரிப்போரும் இருக்கிறார்கள்.

பதவி போனால், பட்டாசு போடு!

அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக்​கிடக்கிறது வேலூர் அ.தி.மு.க.. வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக எஸ்.ஆர்.கே.அப்பு நியமிக்கப்பட்டதில், முன்னாள் மாவட்டச் செயலாளர்களுக்கு துளியும் விருப்பம் இல்லை. அதனால், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக்கூட சில நேரங்களில் தவிர்த்துவந்தனர். அப்பு மீதான புகார்களை தலைமைக்கு அனுப்பிவந்த அ.தி.மு.க. புள்ளிகள், கடந்த வாரத்தில் சென்னைக்கே நேரடியாகச் சென்று புகார் மனுக்களைக் கொடுத்து​விட்டு, அவர் பதவி நிச்சயம் காலியாகிவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்​கின்றனர்.

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

அமைச்சர் பதவியில் இருக்கும் போதே டாக்டர் வி.எஸ்.விஜய்க்கும் வேலூர் மேயர் கார்த்தி​யாயினிக்கும் ஏழாம்​பொருத்தம். விஜய்யின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோது மேயரின் ஆதரவாளர்கள் பலரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மாநகரச் செயலாளரான ஏழுமலை, மேயர் கார்த்தியாயினி, டாக்டர் வி.எஸ்.விஜய், அமைச்சர் முகம்மது ஜான் என்று கோஷ்டிகள் அதிகமாகின்றன. இது போதாது என முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் அணி என்று தனியாக ஒரு குரூப் செயல்பட்டு வருகிறது.

மூன்று இரண்டானது!

நெல்லையில் இதுவரை மாநகர மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம், புறநகர் வடக்கு மாவட்டம் என மூன்றாக இருந்த மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக சமீபத்தில் இரண்டாகப் பிரித்து இருக்கிறார் ஜெயலலிதா. நெல்லை மாநகர மாவட்டத்​துக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவரான முருகையா பாண்டியன் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். புறநகர் மாவட்டச் செயலாளராக குமார் பாண்டியன் அறிவிக்கப்பட்டு, அவரும் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் செந்தூர் பாண்டியன், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், மாவட்டச் செயலாளர் முருகையா பாண்டியன், எம்.எல்.ஏ-க்களான நயினார் நாகேந்திரன், இசக்கி சுப்பையா, முத்துச்செல்வி, முன்னாள் மாவட்டச் செயலாளர்களான சுதா பரமசிவன், பாப்புலர் முத்தையா என பலரும் (அம்மம்மா...) தனித்தனிக் கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

இந்த கோஷ்டிகளைப் பொறுத்தவரை ஒரு தரப்பின் தலைமைப் பொறுப்பில் பி.ஹெச்.பாண்டியனும் மற்றொரு கோஷ்டிக்கு நயினார் நாகேந்திரனும் இருக்கின்றனர். சாதாரண கிளைக் கழகம் முதல் ஒன்றியம், நகரம் என அனைத்து அமைப்புகளிலும் பிரிந்து கிடப்பதால், மாற்றுக் கட்சியினரின் தவறுகளை அம்பலப்படுத்த ஆர்வப்படுவதைக் காட்டிலும், உட்கட்சியினரின் தவறுகளையே ஊதிப் பெரிதுபடுத்தும் போக்கு தொடர்கிறது. இந்தக் கோஷ்டிப்பூசல் அடிதடி வரை போய்விட்டதால், 'ஆக்ஷன் ஷோ' எப்படி எல்லாம ஸ்பீடு எடுக்குமோ என்று அதிர்ந்துபோய் கிடக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

ஒதுங்கிய மலரவன்... களம் இறங்கிய ஆறுக்குட்டி!

கோவையிலும் கோஷ்டிப்பூசல் வலுவாகவே உள்ளது. கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர், மேயர் செ.ம.வேலுசாமி. இவருக்கு முன்னர் இந்தப் பதவியை வகித்துவந்த கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான மலரவனுக்கும் செ.ம.வேலு​சாமிக்கும் நீண்ட நாள் மோதல். அரசியல் சதுரங்கத்தில் இருவரும் உச்சத்துக்குப் போவதும் அதலபாதாளத்துக்குள் விழுவதும் மாறி மாறி நடக்க... இரு தரப்பினரும் முறைத்த​படியேதான் திரிந்தனர். இந்த நிலையில் மலரவன் ஆதர​வாளர்கள் சிலரை கட்சியில் இருந்து செ.ம.வேலுசாமி நீக்க... கோஷ்டிப்பூசல் உச்சத்துக்குச் சென்றது. சாதிதான் இந்த மோதல்களுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் கட்சி நடவடிக்கையில் இருந்து இப்போது மலரவன் சற்று ஒதுங்கிக்கொள்ள, செ.ம.வேலுசாமிக்கு எதிராக தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளார் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ-வான ஆறுக்குட்டி. மாநகர எல்லைக்கு உட்பட்ட டாஸ்மாக் பார்களை எடுத்து நடத்துவதில் இரு தரப்புக்கும் ஏக மோதல் என்கிறார்கள் உள் விவரங்களை அறிந்தவர்கள்.

புறநகர் மாவட்டச் செயலாளரான அமைச்சர் தாமோதரனுக்கும், முன்னர் அந்தப் பதவியை வகித்த தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ-வான வேலுமணிக்கும் கோஷ்டிப்பூசல் உச்சத்தில் உள்ளது. தன்னிடம் இருந்த அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் என இரு பதவிகளும் பறிக்கப்பட்டு தாமோதரனிடம் வழங்கப்பட்டதால், அவற்றை மீண்டும் பெறும் முயற்சியில் உள்ளார் வேலுமணி. கோவை மேயர் செ.ம.வேலுசாமிக்கும் அமைச்சர் தாமோதரனுக்கும் சுமுகஉறவு இல்லை என்றாலும், நீ மாநகர் மாவட்டம் நான் புறநகர் மாவட்டம் என்ற புரிந்துணர்வில் செல்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை. சாதி, பதவி எனப் பல வகைகளில் அணி அணியாகப் பிரிந்துதான் பல நிர்வாகிகளும் செயல்படுகின்றனர். இப்படியே போனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு யார் வேலை செய்வார்கள் என்பது தெரியவில்லை.

உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்டே!

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

திருச்சி அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் கட்சியை வளர்க்கிறார்களோ இல்லையோ, கோஷ்டிப்​பூசலை வளர்த்து ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதில் மும்முரமாக செயல்படுகின்றனர்.

திருச்சி மாவட்ட அ.தி.மு.க-வில் அரசுத் தலைமைக் கொறடா மனோகரன், எம்.பி.குமார், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பரஞ்சோதி ஆகியோர் தலைமையில் நான்கு கோஷ்டிகள் இயங்குகின்றன. இதில் எம்.பி. குமார், பரஞ்சோதி கோஷ்டிக்கு இடையே கொஞ்சம் ஒத்துழைப்பு உண்டு. பரஞ்சோதியின் மந்திரி பதவி பறிக்கப்பட்டதில் சிவபதிக்கு முக்கியப் பங்கு உண்டு. பரஞ்சோதிக்கும் டாக்டர் ராணிக்கும் இடையேயான விவகாரத்தை உளவுப் பிரிவு மற்றும் திருச்சியில் உயர் அதிகாரி ஒருவர் மூலம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று அவரது பதவி பறிபோக ஏற்பாடு செய்தது சிவபதிதான் என்று நம்பிய பரஞ்சோதி குரூப், சிவபதியின் காலை வாரிவிட நேரம் பார்த்துக் காத்திருந்தனர். முதல்வர் தொகுதிப் பொறுப்பாளரான சிவபதி அந்த பணியைச் சரிவரக் கவனிக்கவில்லை, முதல்வரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கோயில்களுக்குத் தாமதமாகப் போய் பிரச்னை செய்தார் என்றெல்லாம் புகார்கள் முதல்வர் கவனத்துக்குப் போய் சேரும்படியான விஷயங்களைப் பக்காவாக செய்ய... சிவபதியின் பதவியும் பறிபோனது. இந்த சந்தோஷத்தை ஆரவாரமாகக் கொண்டாடியது பரஞ்சோதி குரூப்.

அரசுத் தலைமைக் கொறடா, முதல்வர் தொகுதி பொறுப்பாளர், மாநகரச் செயலாளர், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. என நான்கு பதவிகளை வைத்துள்ள மனோகரன், கட்சி நிர்வாகிகளை அனுசரித்துப்போவது இல்லை; அவரைச் சுற்றியுள்ள ஒரு சிறு கூட்டம் மட்டும் சொல்வதைக் கேட்கிறார் என்ற குற்றச்சாட்டு. கூட்டுறவு சங்கத் தேர்தலில் உண்மையாக உழைக்கும் கட்சிக்காரர்களுக்கு பதவி கிடைக்க மனோகர் ஏற்பாடு செய்யவில்லை எனச் சொல்லி அவரைக் கண்டித்து உண்ணாவிரதம், தீக்குளிப்புப் போராட்டம் எல்லாம் தொண்டர்கள் நடத்தினர். இந்த விவரங்களை எல்லாம் தலைமைக்குச் சொல்லி இவரது பதவிக்கு வேட்டுவைக்க சிவபதி குரூப்பும், எம்.பி. குமார் குரூப்பும் தனித்தனியாக காய் நகர்த்திவருகிறது. தொகுதி மேம்பாட்டு நிதியை தான் சொல்லும் திட்டங்களுக்கு ஒதுக்கவில்லை என்று எம்.பி. குமார் மீது அதிருப்தியில் உள்ள மனோகர் கோஷ்டி, வரப்​போகும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட குமாருக்கு மீண்டும் ஸீட் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக காய் நகர்த்தி வருகின்றனர்.  

அமைச்சர் பூனாட்சி, புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தின​வேலு ஆகியோர் பதவிக்கு வந்து ஓரிரு மாதங்களே ஆவதால், அவர்களைச் சுற்றி இப்போதுதான் கோஷ்டிகள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. பூசல்கள் இனிமேல்தான் தொடங்கும்.

 'உன் புகார் என் கையில்!’

சேலம் அ.தி.மு.க-வில் மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி பேரில் இயங்குபவைதான் முக்கியமான கோஷ்டிகள். தவிர செம்மலை, எஸ்.கே.செல்வம் கொடிபிடிக்கும் சிறிய கோஷ்டிகளும் இருக்கின்றன.

கட்டி உருளும் கோஷ்டிகள்... சாட்டை எடுப்பாரா ஜெயலலிதா?

எம்.கே.செல்வராஜை எதிர்த்து செம்மலை கோஷ்டியைச் சேர்ந்த கே.சி.செல்வராஜ் என்ற தொகு திச் செயலாளர் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். ஒருமுறை எம்.கே.செல்வராஜைப் பற்றி புகார் மனுவைத் தலைமைக் கழகத்துக்குச் சென்று கொடுத்துவிட்டு வெளியில் வந்தார் கே.சி.செல்வராஜ். அப்போது அவரது செல்போனில் அழைத்த மாவட்டச் செயலாளர், 'என்ன புகார் கொடுத்துட்டியா? உன்னோட புகார் காப்பி என் கைக்கு வந்துடுச்சு. நாளைக்கு நேரில் வந்து வாங்கிட்டுப் போ’ என்று நக்கலடித்தாராம். அந்த அளவுக்கு தலைமைக் கழகத்தில் உள்ள கீழ்மட்ட ஆட்களைக் கைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறார். பின்னர் கே.சி.செல்வராஜை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே காலிசெய்தது தனிக் கதை.  

எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருப்பதால், தங்களுடைய காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்றே பலரும் இவருடன் இருக்கிறார்கள். அவர்களைத் தீவிர விசுவாசிகள் என்று சொல்ல முடியாது.  

விஜயலட்சுமி பழனிச்சாமிக்கு அதிக ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். இவர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே அமைச்சராக இருந்ததால், மூத்த நிர்வாகிகளும் களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தொண்டர்களும் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும் எம்.கே.செல்வராஜும் சேர்ந்து விஜயலட்சுமி பழனிசாமியைப் புறக்கணிக்கிறார்கள். எங்களுக்கும் காலம் வரும் என்று அமைதியாக அவர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள்.

காலைப் பிடித்து இழுக்கும் நண்டுகளின் பட்டியல் இதோடு முடியவில்லை....

 மற்ற மாவட்ட நிலவரங்கள் அடுத்த இதழில்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism