Published:Updated:

இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்: பேரவையில் ஜெயலலிதா பேச்சு

இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்: பேரவையில் ஜெயலலிதா பேச்சு
இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்: பேரவையில் ஜெயலலிதா பேச்சு

சென்னை, ஆக.24,2011

இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்: பேரவையில் ஜெயலலிதா பேச்சு

தமிழகத்தில் இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே தமது லட்சியம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ##~~##

அதிமுக ஆட்சி அமைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தன. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது.

தேமுதிக சார்பில் பண்ருட்டி ராமசந்திரன், இடதுசாரி கட்சிகள் சார்பில் சௌந்திரராஜன் மற்றும் ஆறுமுகம், காங்கிரஸ் சர்பில் ரங்கநாதன், மனித நேயம் கட்சி சார்பில் ஜஹாரி உல்லா, சமத்துவ கட்சி சார்பில் சரத்குமார், குடியரசு கட்சி சார்பில் தே.து.தமிழரசன் அமைச்சர்கள் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

சபாநாயகர் ஜெயகுமார் வாழ்த்திப் பேசியதற்குப் பிறகு, இறுதியாக முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"சம்பிரதாயத்துக்காக தெரிவிக்கபட்ட பாராட்டுகள் போல் எனக்கு தோன்றவில்லை. உள்ளத்தில் அடிதளத்தில்  இருந்து பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பாராட்டை பார்க்கும் போது ஓர் அச்சமாக தோன்றி இருக்கிறது. 100 நாட்கள் முடிந்த பிறகு ஒருவர் கூட குறை சொல்லாமல் பாராட்டி இருக்கிறார்களே, இது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் அந்த அச்ச உணர்வு.

இந்த 100 நாட்களுடன் எல்லாம் முடிந்துவிடவில்லை. இன்னும் எத்தனையோ 100 நாட்கள் இருக்கின்றன. சட்டமன்றத்தில் தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து நம்மை வாழ்த்தி பாரட்ட வேண்டுமே என்று நினைக்கும் போது மிகப்பெரிய சவாலாக எனக்கு தோன்றுகிறது. இந்தச் சவாலை எல்லோர் ஆதரவோடும் சாதிக்க முடியும்.

நாங்கள் எதைச் செய்தாலும் உள்ளச் சுத்தியோடு செய்கிறோம். கடந்த திமுக ஆட்சியில் கேஸ் அடுப்பை கொடுத்தவர்கள் சிலிண்டரை கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு மின் இணைப்பை கொடுப்பவர்கள் மின்சாரம் கொடுக்கவில்லை. நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம். மக்களை ஏமாற்ற மாட்டோம்.

தேர்தலில் திமுக புழங்கவிட்ட ரூ.5,000 கோடி..

இங்கே ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். கடந்தத் தேர்தலில் திமுக பெரிதும் நம்பி இருந்தது பண பலத்தைத்தான். சட்டசபைத் தேர்தலில் திமுகவினர் புழக்கத்தில் விட்ட பணம் 5000 கோடி ரூபாய்.

தேர்தல் ஆணையம் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக திமுகவினரிடம் இருந்து 50 கோடி ரூபாய் கைப்பற்றபட்டது. முன்னால் முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் போய் கொண்டிருந்தார்கள். எனக்கு வேண்டப்பட்ட ஒருவர் அந்த வாக்கிங் போகும் இடத்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் யார் என்பது கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியாது. கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள். தேர்தல் ஆணையம் 50 கோடி ரூபாயை கைப்பற்றி விட்டதே என்று ஒருவர் சொல்ல...

இன்னொருவர், இந்த 50 கோடி ரூபாய் முன்னாள் முதல்வரின் குடும்பத்துக்கு ஒரு பானையில் தண்ணீர் கொண்டு செல்லும் போது சிதறி விழும் சில துளிகள்தான். சிதறி விழுந்த 50 கோடி ரூபாய் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஒட்டு மொத்தமாக எங்கள் அண்ணன் அஞ்சாமல் இருந்து இன்று காணாமல் போன அண்ணன் புலக்கத்தில் விட்ட பணம் இந்த சம்பவத்தை எதற்காக சொல்கிறேன் தெரியுமா? 5000 கோடி ரூபாயை புலக்கத்தில் விட்டு ஆசையை காட்டி ஆட்சியை பறிக்க நினைத்தார்கள். இதற்கெல்லாம் மக்கள் மசியாமல் உறுதியாக நின்று அதிமுகவுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

நிதிப் பற்றாக்குறை இந்த ஆட்சிக்கு பெரிய தடையாக இருக்கிறது என்று இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். அது உண்மைதான். ஒரு தாய்க்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள். 10 பேரும் பசியோடு இருக்கிறார்கள். ஆனால் இருப்பதோ ஒரு தோசை ஒரு தோசை ஒரு குழந்தை பசியை போக்குவதற்கே போதாது. அந்த ஒரு தோசையை 10 துண்டுகளாக பிரித்து 10 பிள்ளைகளுக்கும் அந்த தாய் கொடுப்பாள். இதனால் அந்த குழந்தைகளின் பசி ஆற போவதில்லை என்பது அந்த தாய்க்கு தெரியும். அந்தத் தாயின் நிலையில்தான் நான் இருக்கிறேன்.

கடுமையான நிதிச் சுமையை மீறி நாங்கள் சாதிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 'வருந்தாதே ஏழை மனமே வருங்காலம் நல்ல காலம் மனம் போல இன்பம் நேரும் திருநாளும் வந்து சேரும் தினம் இரவும் பகலும் மாறி வரும் முறையில் எண்ணி பார்' (இதனை பாடலாக பாடுகிறார்) என்பதை சொல்லி நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு இருக்கிறது.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும். தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாக தர வேண்டிய அவசியம் இருக்க கூடாது. அவர்கள் கையேந்தும் நிலை ஏற்பட கூடாது. அந்த நிலையில் என் வாழ்நாளில் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அதுதான் என் லட்சியம் தமிழக மக்களின் ஆதரவோடு அந்த லட்சியத்தை நிறைவேற்றி தீருவோம்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.

அடுத்த கட்டுரைக்கு