Published:Updated:

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?- ஜெ. பதில்

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?- ஜெ. பதில்
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?- ஜெ. பதில்

சென்னை, ஆக.23,2011

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?- ஜெ. பதில்

கடந்த திமுக ஆட்சியில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர் தவறு செய்துள்ள போதிலும், அவர்கள் மீது நடவடிக்‍கை எடுப்பதற்கு பதில், அவர்களை வைத்தே வேலை வாங்குவதுதான் சாமர்த்தியம் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ##~~##

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்‍ கோரிக்‍கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பழ.கருப்பையா, கடந்த ஆட்சியில் தவறு செய்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது குறுக்‍கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, "இதுபோன்ற அதிகா​ரிகளை ஒட்டுமொத்தமாக நீக்‍கிவிட்டு அவர்களுக்‍கு பதில் புதிய அதிகாரிகளை கொண்டுவருவது எளிதல்ல.

கடந்த ஆட்சியில் நமக்‍கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டுள்ள போதிலும், அவர்களை வைத்துதான் தற்போது ஆட்சி நடத்த வேண்டியுள்ளது. அவர்களை வைத்து வேலை வாங்குவதுதான் சாமர்த்தியம்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.

நிலமோசடிக்கு எதிராக நடவடிக்கை..

இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் நஞ்சப்பன் பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் சிலருடைய தூண்டுதலின்பேரில் காவல்துறையினர் தன் மீது பொய்வழக்கு போட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
 
அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, "உறுப்பினர் நஞ்சப்பன் கூறிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் நிலமோசடியில் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.

அடுத்த கட்டுரைக்கு