Published:Updated:

தமிழன் அலங்கரிக்கும் தலைமைப் பொறுப்பு!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சதாசிவம்

தமிழன் அலங்கரிக்கும் தலைமைப் பொறுப்பு!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சதாசிவம்

Published:Updated:
##~##

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி​யாகப் பொறுப்பேற்க உள்ளார் நீதிபதி சதாசிவம். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவியை அடைவது இதுதான் முதல் முறை என்பதுதான் இந்த மகிழ்ச்சியோடு கலந்திருக்கும் அதிர்ச்சி. 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 57 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழகத்துக்குச் சில தகுதிகள் எத்தனை தாமதமாகக் கிடைக்கின்றன என்பதற்கு இன்னுமோர் உதாரணம் இது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து எத்தனையோ நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீதிபதி சதாசிவம் அந்தப் பழைய வரலாற்றை மாற்றிப் புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுதந்திரம் அடைவதற்கு முன், ஆங்கிலேய நீதிபதிகள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருந்தனர்.

தமிழன் அலங்கரிக்கும் தலைமைப் பொறுப்பு!

சுதந்திரத்துக்குப் பிறகு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தைச் சேர்ந்த நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, 1951 முதல் 1954-ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு, தமிழகம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, இங்கிருந்து சென்ற யாரும் அந்தப் பதவியை எட்டவில்லை.

தமிழகத்தில் கொங்கு மண்டலமாகத் திகழும் ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்காவில் உள்ள கடப்பாநல்லூரில் பிறந்து வளர்ந்தவர் நீதிபதி சதாசிவம். தமிழ் வழிக் கல்வியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த பின், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1973-ம் ஆண்டு வழக்கறிஞர் தொழிலில் அடியெடுத்துவைத்த சதாசிவம், கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் திறம்பட நடத்தியவர். தமிழக அரசின் அரசு சிறப்பு வழக்கறிஞராகவும், அதன் பிறகு போக்குவரத்துக் கழக வழக்கறிஞராகவும் பணியாற்றினார். நகராட்சிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வழக்குகளுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடினார். 1996-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகும் வாய்ப்பு சதாசிவத்துக்குக் கிடைத்தது. 11 ஆண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகச் சிறப்பாகப் பணியாற்றிய நீதிபதி சதாசிவம், கடந்த 2007-ம் ஆண்டு பஞ்சாப் ஹரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். நான்கே மாதங்களில் அங்கிருந்து பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீரின் பதவிக்காலம், ஜூலை 18-ம் தேதியோடு

தமிழன் அலங்கரிக்கும் தலைமைப் பொறுப்பு!

முடிவடைகிறது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 40-வது தலைமை நீதிபதியாக சதாசிவம் பொறுப்பேற்க உள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக சதாசிவம் பணியாற்றிய காலத்தில், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தார். ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கு, ஒடிசாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் மற்றும் அவரது இரண்டு மகன்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு, மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, சீக்கியர்கள் படுகொலை வழக்கு, பாகிஸ்தான் டாக்டர் கலீல் கிஸ்தி வழக்கு, மும்பை குண்டுவெடிப்பில் தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய்தத் மேல்முறையீடு என, நீதிபதி சதாசிவம் தீர்ப்பளித்த வழக்குகள் பரபரப்பும் பதற்றமும் நிறைந்தவை.

ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கில், 'இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் இயற்கை வளங்கள் மக்களுக்கானவை. தனியார் பகாசுர நிறுவனங்கள் அவற்றுக்கு உரிமை கொண்டாட முடியாது. மக்களின் சம்மதத்துடன் வேண்டுமானால், அரசாங்கம் சில வளங்களைக் கையகப்படுத்தலாம். அதுவும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களுக்காக மட்டுமே’ என்று நீதிபதி சதாசிவம் குறிப்பிட்ட தீர்ப்பு மிக முக்கியமானது.

ஒடிசாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டூவர்ட் மற்றும் அவரது இரண்டு மகன்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான தாராசிங், தன்னை இந்த வழக்கில் இருந்து விடுதலைசெய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்தார். அந்த மனுவை எதிர்த்த சி.பி.ஐ. வழக்கறிஞர், தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரினார். சி.பி.ஐ. வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி சதாசிவம், தாராசிங்குக்கு ஆயுள் தண்டனை​யை உறுதிசெய்து தீர்ப்பளித்தார். அப்போது தனது தீர்ப்பில், 'ஒவ்வொருவரும் மகாத்மா காந்தியின் பாதையில் மதங்களைப் பின்பற்றினால், அது நமது நாட்டை அமைதிக்கும் வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுபோல் நீதிபதி சதாசிவம் வழங்கிய பல தீர்ப்புகள் இன்று முன்னுதாரணங்களாக உள்ளன.

தொடரட்டும் தீர்ப்புகள்!

- ஜோ.ஸ்டாலின், படம்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism