Published:Updated:

தூத்துக்குடியில் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி!

Vikatan Correspondent
தூத்துக்குடியில் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி!
தூத்துக்குடியில் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில்  உள்ள ஸ்ரீ வெங்கடேசபுரம் கிராமத்தை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி  தத்தெடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி!

கிராமங்களைத் தத்தெடுத்து முன் மாதிரி கிராமமாக உருவாக்கிட,  எம்.பி. க்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் எம்.பி.க்கள் கிராமங்களைத் தத்தெடுத்து வருகிறார்கள்.

அதன்படி,கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி யூனியன் ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்தை தத்தெடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி!

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கன்மொழி, " இப்பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் இல்லாததால், எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட கருமேனி–நம்பியாறு இணைப்பு திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இதனால் இப்பகுதி மிகவும் வறட்சி பாதித்த பகுதியாக உள்ளது.

எனவே நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சும் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, இங்குள்ள கிராமங்களில் மண் பரிசோதனை செய்து, இங்கு வளரக்கூடிய தகுதியான மரங்களை கண்டறிந்து, அவற்றை வளர்க்க ஏற்பாடு செய்வேன். இங்குள்ள மண் வளத்தை மேம்படுத்தி தருவேன்" என்று கூறினார்.

தூத்துக்குடியில் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி!

மேலும் அவர், "மத்திய அரசு அறிவிக்கும் பல நல்ல திட்டங்களை மாநில அரசு அதிகாரிகள் செயல்படுத்த விடாமல் தடுக்கின்றனர்.இருந்தாலும் இப்பகுதி மக்களின் ஒப்புதலோடு கிராமத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வேன்" என்றார்.

படங்கள்: ஏ.சிதம்பரம்