Published:Updated:

35 ஆண்டுக்குப் பிறகு 140 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு நீர்மட்டம்!

விகடன் விமர்சனக்குழு

தேனி : முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 35  ஆண்டுகளுக்கு பிறகு இன்று 140 அடியைத் எட்டியுள்ளது.

இதையடுத்து, அணையில் தண்ணீர் திறப்பின் அளவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது குறித்த தமிழக அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்தால் அணையிலுள்ள மதகுகள் வழியே தண்ணீர் வெளியேற்றப்படும் என்று நாதன் தலைமையிலான மூவர் குழு கடந்த ஆய்வின் போது தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதை அடுத்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அணையில் 142 அடி வரை தண்ணீரை தமிழக அரசு தேக்கி வைக்கும் எனவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன.