Published:Updated:

தமிழகத்தில் தனியார் கல்லூரியை இணையதளம் மூலம் விற்க முயற்சி: 2 பேர் சிக்கினர்!

தமிழகத்தில் தனியார் கல்லூரியை இணையதளம் மூலம் விற்க முயற்சி: 2 பேர் சிக்கினர்!
தமிழகத்தில் தனியார் கல்லூரியை இணையதளம் மூலம் விற்க முயற்சி: 2 பேர் சிக்கினர்!

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலெட்சுமி  மெடிக்கல் கல்லூரியை  இணையதளம் மூலம் விற்க முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழகத்தில் தனியார் கல்லூரியை இணையதளம் மூலம் விற்க முயற்சி: 2 பேர் சிக்கினர்!

உங்க வீட்டுல இருக்கிற பழைய பொருட்களை விற்கனுமா OLX இருக்கு அப்லோட் பண்ணுங்க என  தொலைக்காட்சிகளில் விளம்பரம் அடிக்கடி வந்துபோகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கல்வி நிறுவனமாக விளங்கும் தனலெட்சுமி கல்வி நிறுவனம், திருச்சி, பெரம்பலூர், சென்னை என 16க்கும் மேற்பட்ட பொறியியல், மருத்துவக்கல்லூரிகள், கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் தனியார் கல்லூரியை இணையதளம் மூலம் விற்க முயற்சி: 2 பேர் சிக்கினர்!

இப்படிப்பட்ட நிறுவனங்கள் நடத்தி வரும்  மருத்துவக் கல்லூரியான தனலெட்சுமி மருத்துவக்கல்லூரியை 700 கோடிக்கு விற்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் இணையதளத்தில் (olx.in) விளம்பரம் வந்தது.
இது தொடர்பாக தனலெட்சுமி மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பெரம்பலூர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகன், கண்ணன் மகன் கதிரவன் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட பட்டாபிராமன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தனியார் மருத்துவக் கல்லூரியை இணையதளம் மூலம் விற்க முயன்ற சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார்