Published:Updated:

141 அடியை தாண்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்!

141 அடியை தாண்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்!
141 அடியை தாண்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்!

தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 141 அடியை தாண்டியுள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு 142 அடி வரை அணையில் தண்ணீர் தேக்கப்பட உள்ளது.
 

141 அடியை தாண்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி, அணைக்கு 3 ஆயிரத்து 357 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர் இருப்பு, 7 ஆயிரத்து 342 மில்லியன் கனஅடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியுள்ளது.

இதனிடையே தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கலாம் என தமிழக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.