Published:Updated:

ரோசய்யாவை நேரில் வரவேற்றார் ஜெயலலிதா!

சென்னை,  ஆக.31, 2011

தமிழக ஆளுனராக இன்று பதவியேற்கும் ரோசய்யாவை, சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். ##~~##

தமிழக ஆளுனராக இருந்து வந்த சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அப்பதவியில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ரோசய்யா நியமிக்கப்பட்டார்.

புதிய ஆளுனராக பதவி ஏற்பதற்காக ரோசய்யா தனி விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து நண்பகல் 11.40 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார்.

சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரை சால்வை அணிவித்து வரவேற்றார்.

தமிழக ஆளுனராக ரோசய்யா இன்று மாலை பதவியேற்கிறார். ஆளுனர் மாளிகையில் 4.25 மணிக்கு  பதவியேற்பு  நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, மாநில அமைச்சர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு