Published:Updated:

விநாயகர் சதுர்த்தி திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து

Vikatan Correspondent
விநாயகர் சதுர்த்தி திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து

சென்னை, செப்.1,11:  வீடெங்கும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும் தவழட்டும் என்று விநாயகர் சதுர்த்தியையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயக சதுர்த்தியை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி, சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வரர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாகத் துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றியே அன்றி தோல்வி காணாது என்பது நம் நாட்டு மக்களின் தொன்று தொட்ட நம்பிக்கை ஆகும்.

நம்பிக்கை சின்னமாம் தும்பிக்கை நாயகனின் அருளால், வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறையட்டும் என்று வாழ்த்தி, விநாயகர் சதுர்த்தித் திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் எனதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.