Published:Updated:

பேரவையில் இரங்கல் தீர்மானம்: திமுக புறக்கணிப்பு

Vikatan Correspondent
பேரவையில் இரங்கல் தீர்மானம்: திமுக புறக்கணிப்பு
பேரவையில் இரங்கல் தீர்மானம்: திமுக புறக்கணிப்பு

சென்னை, செப்.7,2011

பேரவையில் இரங்கல் தீர்மானம்: திமுக புறக்கணிப்பு

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக இதில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்தது. ##~~##

சட்டப்பேரவையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் ஒன்றை படித்தார். அந்தக் குறளுக்கு விளக்கம் கொடுத்த பிறகு திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து வணக்கத்தை வைத்து விட்டு எதுவும் பேசாமல் அவை விட்டு வெளியேறினர்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜெயகுமார், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதில் கலந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு, எந்தப் பதிலும் அளிக்காமல் அவையை விட்டு திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.

அவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் ஏ.வ.வேலு, "சட்டப்பேரவையில் எங்கள் குரல் ஒலிக்கவில்லை. திருக்குறள் கேட்ட திருப்தியே போதும்," என்றார்.

பின்னர், டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.