Published:Updated:

மகாராஷ்டிரா: தேவையான எண்ணிக்கை... 37 சிவசேனா எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்தைப் பெற்ற ஏக்நாத் ஷிண்டே!

ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்

மகாராஷ்டிராவில் புதிய திருப்பமாக சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 37 எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா: தேவையான எண்ணிக்கை... 37 சிவசேனா எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்தைப் பெற்ற ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிராவில் புதிய திருப்பமாக சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 37 எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்

மகாராஷ்டிராவில் கடந்த 20-ம் தேதி சட்டமேலவைக்குத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் முடிந்த பிறகு திடீர் திருப்பமாக இரவோடு இரவாக அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத் மாநிலம் சூரத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அங்கிருந்து அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்திக்குச் சென்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாமுக்குச் சென்றவண்ணம் இருந்தனர். ஆரம்பத்தில் 30 சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது தேவையான 37 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு ஏக்நாத் ஷிண்டேவுக்குக் கிடைத்துவிட்டது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

நேற்று மாலையே 37 சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுவிட்டனர். சுயேச்சை எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து தங்களுக்கு 42 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார். கட்சித் தாவல் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கத் தேவையான ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கிடைத்துவிட்டதால், அவர்கள் கையெழுத்திட்ட கடிதம் இன்று மகாராஷ்டிரா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் 12 எம்.எல்.ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவியைப் பறிக்கும்படி சிவசேனா, துணை சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறது. ஆனால் இது சட்டவிரோதம் என்றும், எங்களுக்கும் சட்டம் தெரியும் என்றும், யாரை பயமுறுத்தப் பார்க்கிறீர்கள் என்று ஏக்நாத் ஷிண்டே பதிலளித்திருக்கிறார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கூட்டிய கூட்டத்துக்கு வெறும் 13 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரத் பவார்
சரத் பவார்

உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே அவரைக் கைவிட்டுவிட்டு ஷிண்டே பக்கம் சென்றுவிட்டனர். சூரத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அனுப்பப்பட்ட ரவீந்திர பதக் மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் ஏக்நாத் ஷிண்டே அணியுடன் சேர்ந்துவிட்டனர். இதனால் சிவசேனாவே, உத்தவ் தாக்கரேவைக் கைவிட்டுச் செல்லும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே மகா விகாஷ் அகாடி கூட்டணி உருவாகக் காரணமாக இருந்த சரத் பவார் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், ``யாருக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தெரிந்துகொள்ள முடியும். அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் எவ்வாறு குஜராத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு யார் ஆதரவு கொடுக்கின்றனர் என்று அனைவரது பெயரையும் தெரிவிக்க விரும்பவில்லை. அஸ்ஸாம் அரசு அவர்களுக்கு உதவி செய்கிறது” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism