Published:Updated:

மக்கள் பார்வை மதிமுக பக்கம் திரும்பியுள்ளது: வைகோ

Vikatan Correspondent
மக்கள் பார்வை மதிமுக பக்கம் திரும்பியுள்ளது: வைகோ
மக்கள் பார்வை மதிமுக பக்கம் திரும்பியுள்ளது: வைகோ

திருநெல்வேலி, செப்.8,2011

மக்கள் பார்வை மதிமுக பக்கம் திரும்பியுள்ளது: வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மக்களின் பார்வை மதிமுக பக்கம் திரும்பியுள்ளது அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ கூறினார். ##~~##

திருநெல்வேலியில் இம்மாதம் 15-ம் தேதி மதிமுக தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டு பணிகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "அண்ணா பிறந்தநாளையொட்டி நெல்லை பொருட்காட்சி திடலில் வருகிற 15-ம் தேதி மதிமுகவின் தென்மண்டல மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டுக்கு கட்சியின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை வகிக்கிறார். நான் சிறப்புரையாற்றுகிறேன்.

ஈத்தாமொழி திரவியம் பெயரில் அரங்கமும், காஞ்சிபுரம் செங்கொடி பெயரில் வளாகமும் அமைக்கப்படுகிறது.

சட்டபேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்த பிறகு மக்களின் பார்வை மதிமுக பக்கம் திரும்பியுள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நாங்கள் உருவாகியுள்ளோம்.
 
இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ஒரே தீர்வு தனி ஈழம் மட்டுமே. அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

நெல்லையில் நடைபெறும் தென் மண்டல மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த மாநாடு மதிமுகவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்," என்றார் வைகோ.