Published:Updated:

நீதி விசாரணைக்கு பிறகே நடவடிக்கை: ஜெ. திட்டவட்டம்

நீதி விசாரணைக்கு பிறகே நடவடிக்கை: ஜெ. திட்டவட்டம்
நீதி விசாரணைக்கு பிறகே நடவடிக்கை: ஜெ. திட்டவட்டம்

நீதி விசாரணைக்கு பிறகே நடவடிக்கை: ஜெ. திட்டவட்டம்

சென்னை, செப்.14,2011

நீதி விசாரணைக்கு பிறகே நடவடிக்கை: ஜெ. திட்டவட்டம்

பரமக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நீதி விசாரணைக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். ##~~##

சட்டப்பேரவையில் இன்று பரமக்குடி சம்பவம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் மற்றும் பாமக ஆகிய நான்கு கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பரமக்குடியில் 7 பேரின் பலியானதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதா, "அரசால் ஒரு சார்புடன் நடவடிக்கை எடுக்க முடியாது.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த நான் உத்தரவிட்டு இருந்தேன். டி.ஆர்.ஓ. விசாரணை நடத்தியிருந்தால் இதற்குள் அறிக்கை வந்திருக்கும். அதன் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.

ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என கோரப்பட்டது. எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கைக்குப் பின்பு அதன் பரிந்துரைகளையொட்டியே அரசு நடவடிக்கை எடுக்கும்.

அதேபோல், நீதிபதியின் பரிந்துரைகளுக்கு பின்புதான் நிவாரணத் தொகையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும். விசாரணை முடிந்த பிறகே எதையும் கூற முடியும்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.

அடுத்த கட்டுரைக்கு