பா.ஜ.வில் கிரண் பேடி சேர்ந்தது எப்படி? மர்மத்தை உடைக்கும் கணவர்!

சண்டிகார்: அரசியலே வேண்டாம் என்று இருந்த கிரண் பேடி எப்படி பா.ஜனதாவில் சேர்ந்தார் என்பது குறித்த மர்மத்தை அவரது கணவர் பிரிஜி பேடி உடைத்துள்ளார்.
 

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு குழுவில் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தவர் கிரண் பேடி. திடீரென பா.ஜனதா கட்சியில் சேர்ந்த கிரண்பேடி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ. கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.

இதனிடையே, தனது மனைவி கிரண்பேடி குறித்து அவரது கணவர் பிரிஜி பேடி கூறுகையில், "பா.ஜனதாவில் கிரண்பேடி இணையும் முன் வரை நாங்கள் அரசியலில் எந்த ஈடுபாடும் இல்லாமல் இருந்தோம். பா.ஜனதாவில் இணைவதற்கு முந்தைய நாள் வரை அரசியலில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கிரண் பேடி கூறி வந்தார்.

ஆனால் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு,  எனக்கு போன் செய்து  நான் ஒன்று நினைத்தேன். ஆனால் விதி வேறுபாதைக்கு அழைத்து செல்கிறது எனக் கூறினார். அரசியலில் சேரவேண்டும் என்ற அவரது முடிவை நான் ஏன் ஆதரிக்க கூடாது? அவர் ஒரு புத்திசாலி பெண்மணி. அவரை நான் எப்போதும் ஆதரிப்பேன். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் வசிக்கவில்லை என்பதால் நான் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று அர்த்தமில்லை” என்றார்.

கிரண் பேடியின் கணவர் பிரிஜி பேடி, பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கும் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!