கிரண் பேடியின் தோல்வி: பா.ஜனதா மீது கணவர் குற்றச்சாட்டு!

சண்டிகர்: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவினரின் முழு ஒத்துழைப்பு இல்லாததே கிரண்பேடியின் தோல்விக்குக் காரணம் என்று அவரின் கணவர் பிரிஜ் பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக  பிரிஜ் பேடி பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட ஹர்ஷ் வர்தன் ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே தொகுதியில், பிரபலமில்லாத ஒரு வேட்பாளரை எதிர்த்து தற்போது போட்டியிட்ட கிரண் பேடி சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

பாஜகவினர்  அவரை ஆதரித்து வேலை செய்யவில்லை. அவருக்கு முழு ஆதரவு அளிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.  பாஜக தொண்டர்கள் முழு ஆதரவு அளித்திருந்தால் அங்கு கிரண் பேடி வெற்றி பெறாமல் போயிருக்க முடியாது.

கிரண் பேடியால் பாஜக  தோற்கவில்லை. நிர்வாகத் திறமை மிக்க அவரை வெற்றியடைய வைக்க முடியாத பாஜக தான் தோல்வியடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!