Published:Updated:

திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்சோதி

சென்னை செப்.16,2011

திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக மு.பரஞ்சோதி அறிவிக்கப்பட்டுள்ளார்.  ##~~##

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மு.பரஞ்சோதி போட்டியிடுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டது.

பரஞ்சோதி 2006 -2011-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கபட்டவர்.

கடந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டதால். அந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கபட்டார்.

இந்த நிலையில், திருச்சி மேற்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக அவர் அறிவிக்கபட்டுள்ளார்.

அதேவேளையில், புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி அதிமுக வேட்பாளராக வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.