Published:Updated:

அதிமுக மேயர் வேட்பாளர்கள் 10 பேர் அறிவிப்பு: சென்னையில் சைதை துரைசாமி போட்டி!

அதிமுக மேயர் வேட்பாளர்கள் 10 பேர் அறிவிப்பு: சென்னையில் சைதை துரைசாமி போட்டி!
அதிமுக மேயர் வேட்பாளர்கள் 10 பேர் அறிவிப்பு: சென்னையில் சைதை துரைசாமி போட்டி!

சென்னை, செப்.16,2011

அதிமுக மேயர் வேட்பாளர்கள் 10 பேர் அறிவிப்பு: சென்னையில் சைதை துரைசாமி போட்டி!

சென்னை மேயர் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக சைதை துரைசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை துரைசாமி, மிகக் குறைவான வாக்குகளில்தான் தோல்வியுற்றவர்.

சென்னையில் இவரது மனித நேய அறக்கட்டளை மூலம் மாணாக்கர்களுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ##~~##

தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார். அதன் விவரம்: 

1. சென்னை - சைதை துரைசாமி
2. வேலூர் - கார்த்தியாயிணி
3. சேலம் - சவுண்டப்பன்
4. ஈரோடு - மல்லிகா பரமசிவம்
5. கோவை - செ.ம.வேலுசாமி
6. திருப்பூர் - திருப்பூர் ஆர்.விசாலாட்சி
7. திருச்சி - எம்.எஸ்.ஆர்.ஜெயா
8. மதுரை - வி.வி.ராஜன் செல்லப்பா
9. நெல்லை - விஜிலா சத்தியானந்த்
10. தூத்துக்குடி - எல்.சசிகலா புஷ்பா