Published:Updated:

உள்ளாட்சித் தேர்தலில் காங். தனித்து போட்டி: தங்கபாலு

உள்ளாட்சித் தேர்தலில் காங். தனித்து போட்டி: தங்கபாலு
உள்ளாட்சித் தேர்தலில் காங். தனித்து போட்டி: தங்கபாலு

சென்னை, செப்.16.2011

உள்ளாட்சித் தேர்தலில் காங். தனித்து போட்டி: தங்கபாலு

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார். ##~~##

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னை - சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜே.எம்.ஆரூண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்," என்றார்.

"இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வேட்பு மனு இம்மாதம் 18-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் 20-ம் தேதி திரும்ப பெறப்படும்," என்று அவர் கூறினார்.
 
மேலும், "மேயர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.10 ஆயிரமும், நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமாகவும், மாவட்ட ஊராட்சி தலைவர்பதவிக்கு ரூ.3 ஆயிரம், நகர வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரம் ரூபாயாகவும் விருப்பமனு கட்டணமாக  நிர்ணயிக்கப்படடுள்ளது," என்றார் தங்கபாலு.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.