Published:Updated:

சுதந்திரப் போராட்ட வீரர் மாயாண்டி பாரதி காலமானார்!

மதுரை:  சுதந்திர போராட்ட தியாகி மாயாண்டி பாரதி மதுரையில் காலமானார்.  99 வயதான மாயாண்டி பாரதி கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தார்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் மாயாண்டி பாரதி காலமானார்!

விடுதலைப் போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மாயாண்டி பாரதி, சுதந்திரத்துக்குப் பிறகும் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் 1967 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார். சுமார் 13 ஆண்டுகளைச்  சிறையிலேயே  கழித்துள்ளார்.

சிறு வயது முதல் பொதுவுடைமை கொள்கையில் நாட்டம் கொண்டிருந்தவர் மாயாண்டி பாரதி.  ஜனசக்தி இதழின் ஆசிரியர் குழுவிலும் ,

தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் குழுவிலும்   பணியாற்றிய  மாயாண்டி பாரதி 1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

1994 ஆம் ஆண்டிற்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருந்த இவர் இறுதிக் காலம் வரை சமூக விடுதலைக் குறித்து அக்கறையோடு பேசியும் எழுதியும் வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

படம்: இ.ஜெ.நந்தகுமார்