Published:Updated:

அதிமுக வேட்பாளர்கள் 6-வது பட்டியல் வெளியீடு

அதிமுக வேட்பாளர்கள் 6-வது பட்டியல் வெளியீடு
அதிமுக வேட்பாளர்கள் 6-வது பட்டியல் வெளியீடு

சென்னை, செப்.21, 2011

அதிமுக வேட்பாளர்கள் 6-வது பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் 6-வது பட்டியலை, அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். ##~~##

இந்தப் பட்டியலில் 398 பேரூராட்சிகளுக்கு தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுஉள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் களம் காணும் விதம் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அதிமுக தனது கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி வெளியிட்டதும் கவனதுக்குரியது.
 

அடுத்த கட்டுரைக்கு