காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக குஷ்பு நியமனம்!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தி.மு.க.வின் தலைமை கழகப் பேச்சாளராக வலம் வந்த நடிகை குஷ்பு, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி காங்கிரசில் இணைந்தார்.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போதே குஷ்புவுக்கு கட்சியில் பெரிய அளவிலான பதவி வழங்க உள்ளதாக பல்வேறு விதமான செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில், நடிகை குஷ்புவை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்து, அக்கட்சியின் தலைவி சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!