Published:Updated:

விசைத்தறி தொழிலாளர் பிரச்னை: வைகோ கோரிக்கை

Vikatan Correspondent
விசைத்தறி தொழிலாளர் பிரச்னை: வைகோ கோரிக்கை
விசைத்தறி தொழிலாளர் பிரச்னை: வைகோ கோரிக்கை

சென்னை, அக்.1,2011

விசைத்தறி தொழிலாளர் பிரச்னை: வைகோ கோரிக்கை

விசைத்தறி தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில், சோமனூர், பல்லடம், அவினாசி ஆகிய பகுதிகளில் இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன.

அவற்றுள், நேரிடையாக இரண்டு லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக நான்கு லட்சம் தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், விசைத்தறி சங்க துணி உற்பத்தியாளர்களிடம், தங்களுக்கு கூலி உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று 1.6.2011-ஆம் தேதி கோரிக்கை வைத்தனர்.  
 
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநில அமைச்சர்களிடம் நேரிடையாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

அதனால், கடந்த 23.09.2011 முதல் பல்லடம், சோமனூர், தெக்கலூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான பெண்களுடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
 
தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக அழைத்துப் பேசி, நியாயமான கூலி உயர்வுடன் சுமூகமான உடன்பாடு ஏற்படுத்தித் தர வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.