Published:Updated:

காங்கிரஸின் திருச்சி மேயர் வேட்பாளர் மாற்றம்!

Vikatan Correspondent

சென்னை, அக்.6,2011

திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்று மாற்றப்பட்டார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மாநராட்சி மேயர் தேர்தலில் விஜயா சேகர் போட்டியிடுவார் என கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு அறிவித்தார்.

திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் வரும் 17ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 30-ம் தேதி தொடங்கியது. வரும் 7-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

திருச்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் எம்.எஸ்.ஆர்.ஜெயா போட்டியிடுகிறார். திமுக சார்பில் விஜயா ஜெயராஜ் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சுஜாதா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தன்னைக் கேட்காமலேயே தனது பெயர் அறிவிக்கப்பட்டது என்றும், இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று சுஜாதா மறுத்துவிட்டார்.

தற்போது மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் அவர் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று கூறிவிட்டார். காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட மறுத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், திருச்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் விஜயா சேகர் போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.