Published:Updated:

கூடங்குளம் பிரச்னையில் மக்களுக்கே ஆதரவு: ஜெ.

Vikatan Correspondent
கூடங்குளம் பிரச்னையில் மக்களுக்கே ஆதரவு: ஜெ.
கூடங்குளம் பிரச்னையில் மக்களுக்கே ஆதரவு: ஜெ.

தூத்துக்குடி, அக்.13,2011

கூடங்குளம் பிரச்னையில் மக்களுக்கே ஆதரவு: ஜெ.

கூடங்குளம் விவகாரத்தில் தமது ஆதரவு மக்கள் பக்கம் தான் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும்  மேயர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூடங்குளம் விவகாரம் பற்றி பேசுகையில், "கூடங்குளம் பிரச்னையில் உங்களில் ஒருவராக இருப்பேன். உள்ளூர் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படும்," என்றார்.

இதனிடையே, கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தக் கோரி, இடிந்தகரையில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

முன்னதாக, கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்டால், மாநில வளர்ச்சியும் தொழிற்சாலை மேம்பாடும் வெகுவாக பாதிக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

அத்துடன், இந்த அணுமின் திட்டத்துக்கு ஆதரவு தருமாறும் முதல்வர் ஜெயலலிதாவை அவர் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்: 

* கூடங்குளம் திட்டம் முடங்கினால் தமிழக வளர்ச்சி பாதிக்கும்: ஜெ.-க்கு பிரதமர் எச்சரிக்கை


* இப்போதுதான் வெடித்ததா கூடங்குளம் போராட்டம்?