Published:Updated:

பிரதமரின் 2வது கடிதம் இன்னும் கிடைக்கவில்லை: ஜெ.

Vikatan Correspondent
பிரதமரின் 2வது கடிதம் இன்னும் கிடைக்கவில்லை: ஜெ.
பிரதமரின் 2வது கடிதம் இன்னும் கிடைக்கவில்லை: ஜெ.

சென்னை, அக்.13,2011

பிரதமரின் 2வது கடிதம் இன்னும் கிடைக்கவில்லை: ஜெ.

கூடங்குளம் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய இரண்டாவது கடிதம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கூடங்குளத்தில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டால், மாநில வளர்ச்சியும் தொழிற்சாலை மேம்பாடும் வெகுவாக பாதிக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

அத்துடன், இந்த அணுமின் திட்டத்துக்கு ஆதரவு தருமாறும் முதல்வர் ஜெயலலிதாவை அவர் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். இது, இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் அனுப்பும் 2-வது கடிதமாகும்.

இந்தக் கடிதம் குறித்து முதல்வர் ஜெயல்லிதாவிடம் சென்னையில் இன்று நிருபர்கள் கேட்டதற்கு, "கூடங்குளம் பிரச்னையில் பிரதமர் அனுப்பிய 2-வது கடிதம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. கூடங்குளம் மக்கள் பிரச்னை. தமிழக அரசு மக்கள் பக்கம் தான் எப்போதும் இருக்கும்," என்றார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது," என்றார்.