வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (24/04/2015)

கடைசி தொடர்பு:16:42 (24/04/2015)

த.மா.கா. தலைவராக ஜி.கே.வாசன் தேர்வு!

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக ஜி.கே.வாசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினர்.

இந்நிலையில், இந்த கட்சியின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்றும், பூரண மதுவிலக்கை வரும் மே 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்த தவறினால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செம்மரம் கடத்தியதாக கூறி அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவர்களின் பிள்ளைகளை இலவசமாக படிக்க வைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்பாவி தொழிலாளர்களை பயன்படுத்தி செம்மரங்களை கடத்தும் மாபியாக்களையும், துணை போகும் அதிகாரிகளையும் அடையாளம் கண்டு ஆந்திர அரசு அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், போலி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மற்றும் வனத்துறையினரை கைது செய்து அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

-மகேஷ்

படம்: எம்.உசேன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்