Published:Updated:

இது தி.மு.க.வுக்குக் கிடைத்த வெற்றி அல்ல... நீதிக்குக் கிடைத்த வெற்றி: கருணாநிதி

Vikatan Correspondent

சென்னை: பவானிசிங் நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தி.மு.க.வுக்குக் கிடைத்த வெற்றி அல்ல... நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று கருணாநிதி கருத்து தெரிவித்து உள்ளார்.

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதை எதிர்த்து அன்பழகன் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இது தி.மு.க.வுக்குக் கிடைத்த வெற்றி அல்ல, நீதிக்குக் கிடைத்த வெற்றி" என்றார்.

மேலும், தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்துக்குத் தேவைப்படும் கூட்டணியாக இருந்தால் இது குறித்து தி.மு.க. பரிசீலிக்கும். தமிழக பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்க, தமிழக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் முயற்சி பாராட்டத்தக்கது என்று கூறினார்.