Published:Updated:

விஜயகாந்தின் ஒருங்கிணைப்பு முயற்சி அரசியல் நோக்கமுடையதா?

Vikatan Correspondent
விஜயகாந்தின் ஒருங்கிணைப்பு முயற்சி அரசியல் நோக்கமுடையதா?
விஜயகாந்தின் ஒருங்கிணைப்பு முயற்சி அரசியல் நோக்கமுடையதா?
விஜயகாந்தின் ஒருங்கிணைப்பு முயற்சி அரசியல் நோக்கமுடையதா?

மேகேதாட்டூவில் கர்நாடக அணை கட்டும் பிரச்னை தொடர்பாக தேமுதிக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தலைமையில் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.

முன்னதாக இது தொடர்பாக விஜயகாந்த், அதிமுகவை தவிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசி ஒருங்கிணைத்த நடவடிக்கை,  தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாது,  பாராட்டையும் பெற்றது.

அதே சமயம் இதற்கு முன் தமிழகம் சந்தித்த எத்தனையோ பிரச்னைகளின்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறு செயல்படுவது அரசியல் ஆதாயம் கருதிதான் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் விஜயகாந்தின் இந்த நடவடிக்கை நல்லதொரு முன்னுதாரணமான செயலா அல்லது அரசியல் நோக்கமுடையதா? உங்களது கருத்து எதுவானாலும் அதனை முன்வைத்து விவாதிக்கலாம்.