Published:Updated:

அதிமுகவின் 10 துணை மேயர் வேட்பாளர்களும் தேர்வு

விகடன் விமர்சனக்குழு

சென்னை, அக்.29,2011

சென்னை உள்பட 10 மாநாகராட்சிகளுக்கான துணை மேயர் பதவிகளில் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

உள்ளாட்சி பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

நகர்ப்புறப் பகுதிகளில் 10 துணை மேயர் பதவிக்கான தேர்தலில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்தப் பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட துணை மேயர்களின் விவரம்:

சென்னை - பா.பென்ஜமின்
வேலூர் - வி.டி.தர்மலிங்கம்
சேலம் - எம்.நடேசன்
ஈரோடு - கே.சி.பழனிச்சாமி
திருப்பூர் - சு.குணசேகரன்
கோயம்புத்தூர் - என்.சின்னதுரை
திருச்சி - எம்.ஆசிக் மீரா
மதுரை - ஆர்.கோபால கிருஷ்ணன்
திருநெல்வேலி - பி.கணேசன் என்ற ஜெகன்நாதன்
தூத்துக்குடி - பி.சேவியர்