Published:Updated:

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. க.சுப்பு காலமானார்

விகடன் விமர்சனக்குழு
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. க.சுப்பு காலமானார்
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. க.சுப்பு காலமானார்

சென்னை, அக் 29,2011

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. க.சுப்பு காலமானார்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. க.சுப்பு மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு நேற்று மதியம் திடீரென மூச்சுத் திணறல் எற்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள அவர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் இன்று காலை 7.40 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

க.சுப்புவுக்கு தேவி ரமணி என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அவரது க.சுப்புவின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தோழர் சுப்புவின் மறைவு, பாட்டாளி வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு. அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளை நேரடியாகவே அறிந்தவன் நான்.

அவருடைய பேச்சாற்றலும், வாதத் திறமையும் பகைவர்களையும் வசீகரிக்கக் கூடியவை என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். அவருடைய மறைவு தொழிலாளர் வர்க்கத்திற்கும், சாதாரண சாமான்ய மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் இழப்பாகும்.
 
அவருடைய குடும்பத்தாருக்கும், மனைவி மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கருணாநிதி கூறியுள்ளார்.